"அப்போது விடுதலை புலிகளை முடித்தோம்! இப்போது பொருளாதார பிரச்னையை முடிப்போம்!" மகிந்த ராஜபக்ச பரபர
கொழும்பு: இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராசபக்ச மக்களிடையே பேசினார்.
குட்டி தீவு நாடான இலங்கை பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருந்த ஒரு நாடாகும். கொரோனா காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை, இன்னும் கூட முழுமையாக மீளவில்லை.
இதன் காரணமாக இலங்கை மிக மோசமான பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இத்துடன் கடந்த காலங்களில் வாங்கிய கடனுக்கான வட்டியும் சேர, இலங்கை மீளவே முடியாத பொருளாதார நிதி நெருக்கடியை இப்போது சந்தித்து உள்ளது.

இலங்கை
இந்த ஆண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவீதம் என்ற அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி குறைந்துள்ளதால், இலங்கை ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 290 இலங்கை ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கூட இதில் இருந்து தப்பவில்லை.

மக்கள் போராட்டம்
இதனால் இலங்கை நாட்டில் அத்தியாவசிய பணிகளும் கூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இரவு பகல் பாராத அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

24 மணி நேரமும்
இந்நிலையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் நிலைமையைச் சமாளிக்க அரசு 24 மணிநேரமும் உழைத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மக்கள் போராட்டம் தொடங்கிய பின்னர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களிடையே பேசுவது இதுவே முதல்முறையாகும்.

விடுதலைப் புலிகள் போர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச பேசுகையில், "மக்களின் துன்பங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நாங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 30 ஆண்டுக்கால போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வந்தோமோ அதேபோல நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டு வருவோம்" என்று 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ராஜினாமா
இலங்கையில் உள்ள அனைத்து 225 எம்பிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் வலியுறுத்தி வரும் நிலையில், "நாடாளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது" என்று அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையில் இப்போது நடக்கும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவே காரணம் என்றும் அவர் சாடினார்.

அனைத்து கட்சி கூட்டம்
அனைத்து கட்சிகளையும் கொண்ட அரசை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்து இருந்த நிலையில், இது தொடர்பாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 கட்சிகளைச் சேர்ந்த 42 எம்பிகள் உடன் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி இருந்தார், இருப்பினும், தற்போது இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications