கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவிந்த வாக்குகள்.. இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவி ஏற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Sri Lanka election 2019 | இலங்கை தேர்தலில் மாறுபட்ட வாக்குச் சீட்டு வாக்களிப்பது எப்படி ?

    கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபராக நாளை பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்

    இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (சனிக்கிழமை) நடந்தது.
    .
    இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது . அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் 70% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன. அதனை தொடர்ந்து மாலை 5மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?

    மாறிமாறி முன்னிலை

    மாறிமாறி முன்னிலை

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே ஒட்முமொத்தமாக ஐக்கிய தேசிய முன்னணி கட்சி அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா ஆகிய இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.

    தமிழர் வாக்குகள்

    தமிழர் வாக்குகள்

    தபால் வாக்குகளிலும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌சே முன்னிலை பெற்று இருந்தார். அதேபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலும் இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையிலிருந்தார்.

    ராஜபக்சே முன்னிலை

    ராஜபக்சே முன்னிலை

    இன்று காலை 8 மணி நிலபரப்படி ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவைவிட . 37,285 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை வகிக்கிறார். கோத்தபய ராஜபக்சே 12,39,181 வாக்குகளும், சஜித் பிரேமதாச 12,01,896 வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வந்தது.

    கோத்தபய ராஜபக்சே

    கோத்தபய ராஜபக்சே

    இதனிடையே மொத்தம் பதிவான 80 சதவீத வாக்குகளில் கோத்தபய ராஜபக்‌சே 50 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசா 41 சதவீத வாக்குகளும் பெற்று இருப்பதாக காலை 9 மணி வாக்கில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.. சஜித் பிரேமதாசாவைவிட . 4,42,185 வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்சே முன்னிலை வகித்தார். கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், சஜித் பிரேமதாசா 30,97,838 வாக்குகளும் பெற்று இருந்தனர்.

    கோத்தபய வெற்றி

    கோத்தபய வெற்றி

    இறுதி நிலவரம் மாலை 4 மணி அளவில் வெளியானது. இதன்படி கோத்தபய ராஜபக்சே 6924255 வாக்குகள் பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5564239 வாக்குகள் பெற்றார்

    அதிபர் கோத்தபய

    அதிபர் கோத்தபய

    52.25 சதவீத வாக்குகளை பெற்று கோத்தபய வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.. சஜித் பிரேமதாசாவுக்கு 41.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே நாளை பதவி ஏற்கிறார். அதிபராக பதவி ஏற்கும் கோத்தபயவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்-

    English summary
    Sajith Premadasa takes early lead in Sri Lanka presidential election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X