கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சீக்ரெட் ரூம்!" அதிபர் மாளிகையில் ரகசிய சுரங்கப்பாதை.. அதிபர் ராஜபக்ச தப்பியது எப்படி? பரபர வீடியோ

Google Oneindia Tamil News

கொழும்பு: கோட்டாபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து எப்படித் தப்பி இருக்கலாம் என்பது குறித்து முக்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

    Gotabaya Rajapaksa Escape ஆயிட்டார்! Sri Lanka-வில் பதற்றம் | *World | OneIndia Tamil

    இலங்கை நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அங்குப் பொருளாதார நெருக்கடி மிக மோசமாக உள்ளது. போர் தொடங்கி கொரோனா வரை இதற்கு பல்வேறு காரங்கள் சொல்லப்படுகிறது.

    இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருந்து, உணவுப் பொருட்கள் மின்சாரம் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு நிலவுகிறது.

     வெளியாட்கள் உள்ளே வர முடியாது.. பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பக்கா பிளான்! எடப்பாடி தரப்பு ஸ்கெட்ச் வெளியாட்கள் உள்ளே வர முடியாது.. பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பக்கா பிளான்! எடப்பாடி தரப்பு ஸ்கெட்ச்

    இலங்கை

    இலங்கை

    இலங்கை நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல ஆளும் ராஜபக்ச தரப்பு தான் காரணம் என்பதைக் கண்டித்து இலங்கை மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி போராட்டம் தீவிரமான நிலையில், முதலில் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று அடம்பிடித்த மகிந்த ராஜபக்ச, மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி வேறு வழியின்றி பதவி விலகினார்.

    போராட்டம்

    போராட்டம்

    அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராகப் பதவி ஏற்ற நிலையில், நிலைமை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார். வெளிநாடுகளிடம் இருந்து கடன் பெற அவர் எடுத்த முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். ரணில் விக்கிரமசிங்கே இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    தப்பிச் சென்றார்

    தப்பிச் சென்றார்

    இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் உருவானது. முன்னதாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் அதனைக் கைப்பற்றினர். ஆனால், அதற்கு முன்னதாகவே உளவுத் துறை அளித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச ராணுவ தளத்தில் தஞ்சம் புகுந்தார். மேலும், அவர் கப்பல் மூலம் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகவும் கூட கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான், நேற்று ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகவுதாக அறிவித்தார்.

    வீடியோ

    வீடியோ

    அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்கள் சூழ்ந்து இருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து எப்படித் தப்பிச் சென்று இருக்கலாம் என்பது இந்தியா டுடே புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிபர் மாளிகையில் ஒரு அறையில் சாதாரண கப்போர்ட் போன்ற ஒன்று இருந்துள்ளது. ஆனால், அது ரகசிய அறைக்கான சிறப்பு வழியாகும். இதனை அங்கு இருந்து சிறப்பு அதிரடிப் படையினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    பதுங்கு குழி

    பதுங்கு குழி

    இது தொடர்பான வீடியோ இன்று காலை வெளியான நிலையில், அந்த ரகசிய அறைக்கு கீழேயே பதுங்கு குழி ஒன்றும் இருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலி கதவுக்குப் பின்னால் இருக்கும் இந்த ரகசிய அறைக்கு லிப்ட் மூலம் மட்டுமே செல்ல முடியும். மேலும், அதிபர் மாளிகைக்குக் கீழே இருக்கும் பதுங்கு குழி கடினமான இரும்பு கதவைக் கொண்டு உள்ளது. இவை எல்லாம் அந்த வீடியோவில் தெளிவாக உள்ளது.

    சுரங்கப் பாதை

    சுரங்கப் பாதை

    இலங்கையில் மக்கள் போராட்டம் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்தது. அதிபர் மாளிகைக்கு வெளியே பொதுமக்கள் பெரியளவில் திரண்டு இருந்தனர். எனவே, அதைத் தாண்டி அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, அவர் இந்த சீக்ரெட் சுரங்கப் பாதையைப் பயன்படுத்தியே தப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Secret bunker in which Sri Lanka President Gotabaya Rajapaksa might escaped: (இலங்கை அதிபர் மாளிகையில் இருக்கும் சீக்ரெட் சுரங்கப்பாதை) How Sri Lanka President Gotabaya Rajapaksa escaped from people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X