Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேற வழி இல்லை! மக்கள் போராட்டத்தால் இலங்கை முடக்கம்! இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ஆலோசனை..!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் முற்றிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று அனைத்துக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசு அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால், ராஜபக்சே குடும்பம் கடும் சிக்கலில் உள்ளது.

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

இலங்கை விவகாரம்

இலங்கை விவகாரம்

பொருளாதாரக் கொள்கைகளை தவறாக நிர்வகித்ததால் தான் இலங்கை நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகக் கூறி கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் தோல்வி காரணமாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள், மக்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

உலக நாடுகளிடம் உதவி

உலக நாடுகளிடம் உதவி

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச நாடுகள், உலக வங்கி உள்ளிட்ட பொருளாதார அமைப்புகளிடம் கடன் வாங்கும் முயற்சியை அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களுக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்புகிறார். அதே நேரத்தில் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச

பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் நீடித்து வரும் அரசியல் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்க, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டவுள்ளார். அவரது இந்த நடவடிக்கை இடைக்கால அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் என கூறப்படுகிறது.

முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளை உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு ஆளும் கூட்டணிக்குள் அழுத்தம் கொடுக்கப்பட்டதன் பின்னணி இந்த கூட்டம் நடத்தபடுகிறது எனவும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், தனது தலைமையில்தான் எந்தவொரு இடைக்கால அரசங்கத்தையும் அமைக்க முடியும் என்றும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் அழுத்தம்

அதிகரிக்கும் அழுத்தம்

நாட்டின் மிக மோசமான பொருளாதாரத்தை தவறாக கையாண்டதற்காக அவர் பதவி விலகக் கோரி கடுமையான பொதுப் போராட்டங்களால் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த அதிக அழுத்தத்தில் உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கம் அல்லது அதுபோன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+