அட.. டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறிய இலங்கை அதிபர் மாளிகை.. சுற்றிப்பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்டுள்ள மக்கள் கொந்தளிப்பு காரணமாக அதிபர் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் மக்கள் அதிபர் மாளிகைக்கு சுற்றுலா வரத்தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளதாரம் கடும் நெருக்கடியை சந்தித்தது
உள்நாட்டு போருக்கு பின்னர் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது. மட்டுமல்லாது அந்நிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பு ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

இதனையடுத்து மக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை அரசு ஒடுக்க முற்பட்ட போது கலவரங்கள் வெடித்தன. மக்கள் மேலும் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 9ம் தேதி அதிபர் கோத்தபயவின் மாளிகையான டெம்பிள் ட்ரீயை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.
இதனால் அதிபர் தப்பி சென்று தலைமறைவாகினார். மாளிகையில் அதிபர் இல்லாததையறிந்த பொதுமக்கள் மாளிகை முழுவதும் சுற்றி வந்து அதனை தங்களது செல்போனில் படம்பிடித்து வெளியிட்டனர். மாளிகையிலிருந்த நீச்சல் குளம், சமயல் அறை, படுக்கை அறை என அனைத்தையும் மக்கள் அனுபவித்தனர். அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிப்பாக்க படையெடுத்துள்ளனர். முன்னர் பெட்ரோல் மற்றும் உணவு பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்கள் தற்போது டெம்பிள் ட்ரீ வாசலில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். இதற்காக நாட்டின் பல மூலைகளிலிருந்தும் மக்கள் வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.
சுற்றி பார்க்க வருபவர்களுக்கு சூடான சுவையான உணவும் அங்கேயே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதனை மக்கள் வரிசையில் நின்று பெற்று வருகின்றனர். இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications