கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

69 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய இலங்கை வரலாறு! மக்களால் பதவியிழந்த 2வது பிரதமரானார் மகிந்த ராஜபக்சே!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை சுதந்திரமடைந்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தால் பதவியிழந்த 2வது பிரதமர் என்ற பெயரை மகிந்த ராஜபக்சே பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1953ல் டட்லி சேனாநாயக்க என்பவர் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தால் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே பதவியை இழந்துள்ளார்.

Recommended Video

    Politics பேசுவோம் | Hero-வாக பார்க்கப்பட்ட Mahinda Rajapaksa வீழ்ந்தது எப்படி?

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிபர் பதவியில் இருந்து தான் விலகமாட்டேன் என கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து கூறி வருகிறார்.

    நாசக்கார முயற்சிகளை புறம்தள்ளுங்க! ஒன்றிணையலாம் வாங்க! இலங்கை மக்களுக்கு கோத்தபய வேண்டுகோள்நாசக்கார முயற்சிகளை புறம்தள்ளுங்க! ஒன்றிணையலாம் வாங்க! இலங்கை மக்களுக்கு கோத்தபய வேண்டுகோள்

    மகிந்த ராஜபக்சே ராஜினாமா

    மகிந்த ராஜபக்சே ராஜினாமா

    இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை மே 9ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினார். இலங்கையில் மக்களின் கோபம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்புக்காக மகிந்த ராஜபக்சே திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தனது குடும்பத்துடன் பதுங்கி உள்ளார். அவருக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

     பதவியிழந்த 2வது பிரதமர்

    பதவியிழந்த 2வது பிரதமர்

    இந்நிலையில் தான் நாட்டின் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் ஏற்பட்ட பொதுமக்கள் போராட்டத்துக்கு பணிந்து பதவியை இழந்த 2வது நபர் என்ற மோசமான பெயரை மகிந்த ராஜபக்சே பெற்றுள்ளார். முன்னதாக 1953ல் டட்லி சேனாநாயக்க தனது பிரதமர் பதவியை இழந்தார்.

     1953ல் நடந்தது என்ன?

    1953ல் நடந்தது என்ன?

    அதாவது 1953ம் ஆண்டில் பிரதமராக இருந்த டிஎஸ் சேனநாயக்க மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகன் டட்லி சேனாநாயக்க பிரதமராக பொறுப்பேற்றார். இந்த வேளையில் மானியங்கள் ரத்து செய்யப்பட்டன. அரிசியின் விலை உச்சம் தொட்டது. பொதுமக்கள் வாழ்வதற்கு அதிக செலவு ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டம் வெடித்தது. சுதந்திர இலங்கையில் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக நடந்த முதல் போராட்டம் இதுவாகும். இந்த போராட்டம் மற்றும் உடல்நலத்தை காரணம் காட்டி டட்லி சேனாநாயக்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    4 முறை பிரதமர்... 10 ஆண்டு அதிபர்

    4 முறை பிரதமர்... 10 ஆண்டு அதிபர்

    அதன்பிறகு பலபேர் பிரதமர் பதவியில் முழுமையாக நீடிக்கவில்லை என்றாலும் யாரும் மக்கள் போராட்டத்தால் பதவியை இழக்கவில்லை. தற்போது 69 ஆண்டுகளுக்கு பிறகு மகிந்த ராஜபக்சே பதவியை இழந்துள்ளார். இவர் இதுவரை 4 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். முதன் முதலாக 2004 ஏப்ரல் முதல் 2005 நவம்பர் மாதம் வரை ஒரு ஆண்டு 7 மாதம் வரை பிரதமர் பதவியில் இருந்தார். அதன்பிறகு அவர் 2005 அதிபர் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றார். இந்த காலக்கட்டத்தில் தான் இலங்கை உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. 2009 மே மாதம் 18 ம் தேதி போர் முற்றிலுமாக முடிவடைந்தது. இதில் மகிந்த ராஜபக்சே இலங்கை மக்களிடம் நன்மதிப்பை பெற்றார். இதனால் 2010 அதிபர் தேர்தலிலும் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற்று 2வது முறையாக அதிபர் ஆனார். 2015 வரை அதிபராக பதவி வகித்தார். அதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால் சிறிசேனாவிடம் தோல்வியை தழுவினார்.

    அரசியல் நெருக்கடி

    அரசியல் நெருக்கடி

    இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தார். அதன்பிறகு 2018 அக்டோபர் மாதம் 26ம் தேதி கூட்டணியில் இருந்து ஒரு கட்சி விலகியதால் ரணில் விக்ரமசிங்கேவின் பிரதமர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. ரணில் விக்ரமசிங்கே விலக மறுத்த நிலையில் அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். இதனை ரணில் விக்ரமசிங்கே கடுமையாக எதிர்த்தார். பிரதமர் நியமனத்தில் அரசியலமைப்பு சட்டம் மீறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அந்தாண்டு நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததல் மகிந்த ராஜபக்சே தப்பித்தார். இருப்பினும் டிசம்பர் 3ம் தேதி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தொடர்ந்து டிசம்பர் மாதம் 15ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமரானார்.

    பிரதமராக 2 ஆண்டு பதவி வகிக்காத...

    பிரதமராக 2 ஆண்டு பதவி வகிக்காத...


    இதையடுத்து புதிய அதிபராக 2019ல் கோத்தபய ராஜபக்சே தேர்வானார். இதையடுத்து தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை 2019 நவம்பரில் அவர் பிரதமராக நியமித்தார். 9 மாதம் மட்டுமே அவர் பதவியில் இருந்த நிலையில் 2020ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி மகிந்த ராஜபக்சே மீண்டும் 2020 ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 1 ஆண்டு 9 மாதம் பதவியில் இருந்த நிலையில் தற்போது அவர் பதவியை இழந்துள்ளார். 4 முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள மகிந்த ராஜபக்சே ஒருமுறை கூட முழுவதுமாக பதவியில் வகிக்கவில்லை. அதாவது வெறும் 2 ஆண்டுகளை கூட அவர் பிரதமராக பூர்த்தி செய்ய முடியாதது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PM Mahinda Rajapaksha resigned his post on monday. He was the second PM in history of Srilanka to resign due to public protests. Sity nine years ago, in 1953, P Dudley senanayake also resigned amid public protests over an economic crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X