கொழும்பில் நள்ளிரவில் நடந்தது என்ன? தப்பி ஓடியது ஏன்? விரைவில் மவுனம் கலைக்கிறாராம் மகிந்த ராஜபக்சே!
கொழும்பு: இலங்கையில் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடி கடற்படையிடம் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஓரிருநாட்களில் தலைமறைவு இட்த்டை விட்டு வெளியேறி வந்து செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக போராடிய பொதுமக்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டார் மகிந்த ராஜ்பக்சே.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இலங்கை முழுவதும் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதையடுத்து பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகின.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தாம் மட்டுமே எம்.பி.யாக இருக்கக் கூடிய ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே புதிய பிரதமராக நேற்று நியமித்தார். ரணில் விக்கிரமசிங்கேவும் நேற்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் அரச தலைவர் மற்றும் பிரதமருடன் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 20 ஆக மட்டுப்படுத்தப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தமது முடிவு,அதன் பின்னர் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பான உண்மையான தகவல்களை மகிந்த ராஜபக்ச விரைவில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications