இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்!
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான 2 நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் ராஜபக்சேக்கள் அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆகையால் ராஜபக்சேக்கள் பதவி விலக வலியுறுத்தி 3 வாரத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இலங்கையே போர்க்களமாகி உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் 25 நாட்களாக இரவும் பகலுமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்றும் பவுத்த பிக்குகள் மிக பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர். பின்னர் மகிந்த ராஜபக்சேவின் இல்லத்தையும் பவுத்த பிக்குகள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. நாளைய கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றையும் ராஜபக்சே நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவிடம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொடுத்துள்ளது. அக்கட்சியின் எம்.பி. லக்ஷ்மண் கிரியெல்ல தலைமையிலான எம்.பிக்கள் இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானங்களை கொடுத்தனர். இதனால் இலங்கை அரசியலில் உச்சகட்ட பதற்றம்
நிலவுகிறது.
முன்னதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவியில் இருந்து அகற்றிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக கோத்தபாய ராஜபக்சே ஆலோசனை நடத்தினார். இருந்தபோதும் தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகவே முடியாது என அடம்பிடித்து கொண்டிருந்தார் மகிந்த என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications