நாங்களே மோசமான நிலைல இருக்கோம்.. இதுல எங்க ரஷ்யாவுக்கு பொருளாதார தடை.. விரக்தியில் பேசிய இலங்கை அரசு
கொழும்பு : ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நிலைமையில் எல்லாம் நாங்கள் இல்லை. எனவே நாங்கள் நடு நிலை வகிக்கிறோம் என ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 2வது நாளாக போரை நடத்தி வருகின்றது. குறிப்பாக கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தார். ரஷ்யாவுக்கு எதிராக தன்னிச்சையாக போராடி வருகிறோம் எனவும் aவர் கூறினார்.

மக்களுக்கு துப்பாக்கிகள்
இந்நிலையில் உக்ரைன் மக்களுக்கு 10,000 துப்பாக்கிகள் வழங்க அந்நாட்டு அரசு முடிவவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய துருப்புகள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரை நோக்கி முன்னேறுகிறது. உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு அரசு 10,000 துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளன. இரண்டாவது நாளாக கீவ் நகரில் இன்று காலை குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஜெட் விமானம்
ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. கீவ் நகரின் டார்னிட்ஸ்கியில் ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. செர்னோபில் அணு உலை ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கை நடுநிலை
இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நிலைமையில் எல்லாம் நாங்கள் இல்லை. எனவே நாங்கள் நடு நிலை வகிக்கிறோம் என ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இலங்கை அரசு அறிவித்துள்ளது. "உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது" என வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

இலங்கையின் வேண்டுகோள்
"பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், போர்களை உடனடியாக நிறுத்துவதற்குச் செயல்படுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது எனவும், "இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது." எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications