கழன்ற முக்கிய தலைகள்.. கோத்தபயவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்.!
கொழும்பு : இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக இன்றும் கொட்டும் மழையில் மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராடி வரும் நிலையில் அடுத்தடுத்து அரசின் முக்கிய பதவிகளை வகித்து வந்த தலைவர்கள் பதவி விலகி வருவதால் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிப்பதால் பால் ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களுக்காகவும், பெட்ரோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களுக்காக இலங்கை மக்கள் திண்டாடி வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மற்றும் மின் தடை போன்ற இடர்பாடுகள் காரணமாக மக்கள் போராடி வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மார்வன் அட்டபட்டு, சனத் ஜெயசூர்யா உள்ளிட்டோர் மக்களுடன் கரம் கோர்த்துள்ளனர்.

இலங்கைக்கு நெருக்கடி
நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கைகொடுக்காத நிலையில், இன்று மாலை கொட்டும் மழையிலும் இலங்கை மாணவர்கள் பிரதமர் வீட்டை நோக்கி பேரணியாகச் செல்வதைக் காண முடிந்தது. இதன் காரணமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு தலைவர்களுக்கான பாதுகாப்பையும் அதிகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா, நார்வே மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களை கோத்தய ராஜபக்சே அரசும் தற்காலிகமாக மூடியதன் மூலம் இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

அதிபரின் முட்டாள்தனம்
தலைநகரான கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு வெளியேயும் போராட்டம் தொடரும் சூழலில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆளும் கூட்டணியில் இருந்து இன்று 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததையடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அக்கட்சி இழந்துள்ளது. இந்நிலையில் கூட்டணி அரசு அமைக்க ராஜபக்சே விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் "முட்டாள்தனம்" என்றும் நிராகரித்துள்ளன.

வீதிகளில் போராட்டம்
உணவு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு மோசமடைந்து வருவதால் கோத்தபய பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி முறையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு காவல்துறை எச்சரித்ததையும் மீறி இன்று வழக்கறிஞர்களும் மாணவர்களும் மழையில் பேரணியாகச் சென்று வீதிகளில் போராட்டத்தில் இறங்கினர்.

சுகாதார அவசரநிலை
மேலும் சட்டத்தை மீறியவர்களை கைது செய்யக்கோரி நடந்த போராட்டங்களின் வீடியோ காட்சிகளை இலங்கை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சீருடை அணிந்த நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் "சுகாதார அவசரநிலை" பிரகடனப்படுத்தியுள்ளது.

நிதி அமைச்சர் ராஜினாமா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்சவைத் தவிர ஒட்டுமொத்த இலங்கை அமைச்சரவையும் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்த நிலையில், நேற்று நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்களில் ஒருவரான நிதி அமைச்சர் அலி சப்ரியும் இன்று ராஜினாமா செய்தார். இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வரும் நிலையில், இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை "மிக உன்னிப்பாக" கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications