Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்கொரியாவில் 7 மாதக்குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி... இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற தாய்

Subscribe to Oneindia Tamil

சீயோல் : தென்கொரியாவில் 7 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் உலகை நாடு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மருத்துவரால் தவறுதலாக கொரோன தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு இல்லையென்றாலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தடுப்பூசி போடப்பட்டதாக கூறி குழந்தையின் தாய் இழப்பீடு கேட்டு தென்கொரிய நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

89 நாடுகளில் ஓமிக்ரான்

89 நாடுகளில் ஓமிக்ரான்

டிசம்பர் 16ம் தேதி நிலவரப்படி உலக நாடுகளில் 89 நாடுகளுக்கு பரவி விட்டது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள மக்கள் அதிகம் உள்ள நாடுகளில் இது பரவி வருவதாகவும் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மக்களையும் இது விடுவைக்கவில்லை என்கிறது ஒரு புள்ளி விவரம். டெல்டாவை வைரஸை விட ஓமிக்ரான் வீரியமிக்கது எனும் நிலையில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1.5 முதல் 3 நாட்களில் இரட்டிப்பாகிறது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பால் இதுநாள் வரை தடுப்பூசி போடாதவர்கள் பலர் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

தென்கொரியாவில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம்தான் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இன்னும் அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 7 மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைக்கு கோவிட் தடுப்பூசி

குழந்தைக்கு கோவிட் தடுப்பூசி

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள சீயோங்கம் நகரில் 7 மாதக் குழந்தை சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டு இருந்தது. இதையடுத்து குழந்தையின் தாய் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த வார்டில் உள்ள மருத்துவர் குழந்தைக்கு காய்ச்சலுக்கான ஊசி எனக் கூறி 7 மாத குழந்தைக்கு போட்டுள்ளார்.

மருத்துவமனை மீது புகார்

மருத்துவமனை மீது புகார்


குழந்தைக்கு ஊசி போட்ட பிறகே அது காய்ச்சலுக்கான ஊசி இல்லை என்றும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து குழந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊசி போட்டு 5 நாட்கள் வரை ஆகியும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் சற்று நிம்மதி அடைந்துள்ளது. இதை அடுத்து தவறான ஊசி போட்ட மருத்துவர் மீதும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திய தாய் இழப்பீடு கேட்டு தென்கொரிய நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+