அதிகாலையில் பதற வைத்த கோர சம்பவம்.. தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதி உரிமையாளர், 100 ஆடுகள் பலி!
கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உரிமையாளர் லட்சுமணன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளன. அரசுப் பேருந்து மோதியதில் ஆடுகளின் உரிமையாளரும், வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், நெடுஞ்சாலையில் ஆடுகள் சிதறிக் கிடந்த காட்சி காண்போரின் நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்துள்ளது.

ஆடு மேய்ப்பவர்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த இருபது ஆண்டுகளாக கடலூர், கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை பகுதிகளில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். அந்தவகையில், சமீப சில நாட்களாக கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.

100 ஆடுகள் பலி
இந்நிலையில் இன்று அதிகாலையில் எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது லட்சுமணன் தனது இருசக்கர வாகனத்தில் ஆடுகளின் பின்னால் வந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் வேப்பூர் நோக்கி வரும்போது சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே பின்னால் வந்த செங்கலப்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து திருச்சி நோக்கி சென்ற போது ஆடுகள் மீது மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையில் உடல் சிதறி உயிரிழந்தன.

உரிமையாளரும் உயிரிழப்பு
ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்த லட்சுமணன் மீதும் பேருந்து மோதியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆடுகளின் மீது மோதிய அரசுப் பேருந்தின் பின்னால் வந்த அதே பணிமனையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து மற்றும் தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்ட வசமாக சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

வரிசையாக செத்துக் கிடந்த ஆடுகள்
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் வரிசையாக சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர். சாலை நெடுக ஆடுகள் செத்துக்கிடந்த காட்சி பதைபதைக்க வைத்துள்ளது. இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications