சினிமாவை மிஞ்சும் பயங்கர காட்சி.. வீட்டின் மீது பறந்து வந்து விழுந்த கார்.. அந்தரத்தில் தொங்கி ஷாக்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே வீட்டின் மீது கார் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். வீட்டின் மீது அந்தரத்தில் தொங்கியவாரு கார் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் மகேஷ் வயது 40. விபத்தில் சிக்கிய இவருடைய உறவினர் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக மகேஷ் பரங்கிப்பேட்டை அகரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன், ராஜமூர்த்தி ,கார்த்திக் ,சதீஷ், சிவக்குமார்,ஆகிய ஏழு பேரும் காரில் புதுச்சேரி புறப்பட்டனர். மகேஷ் அதிவேகமாக ஓட்டிச் சென்றாதாக கூறப்படுகிறது.

 பாய்ந்து வந்து விழுந்தது

பாய்ந்து வந்து விழுந்தது

பரங்கிப்பேட்டை அருகே உள்ள கறி குப்பம் பகுதியில் சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது, அந்த கார் மரத்தில் மோதிய வேகத்தில் திரைப்பட சண்டைக் காட்சியில் கார் பறப்பதுபோல மகேஷ் ஓட்டிச் சென்ற கார் பறந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது பாய்ந்து தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.

அலறல்

அலறல்

இதில் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர் அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை விபத்தில் மகேஷ் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். மகேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

மற்றவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

படம் வைரல்

படம் வைரல்

தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டின் மீது அந்தரத்தில் தொங்கியவாரு கார் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விபத்தில் சிக்கியவரை பார்க்க போய், விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+