என்னா ஒரு வெறித்தனம்.. தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகியின் ரவுடித்தனம்
சிதம்பரத்தில் அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்
Recommended Video
சிதம்பரம்: மனைவியுடன் நைட் ஷோ சினிமா பார்க்க அமமுக நிர்வாகி, தியேட்டர் மேனேஜரை தாக்கியதுடன், தியேட்டரையும் சேர்த்து அடித்து துவம்சம் செய்துள்ள சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை தந்துள்ளது.
சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மில்லர். இவர் தனது மனைவியுடன் காப்பான் படம் பார்க்க வடுகநாதன் தியேட்டருக்கு நைட் ஷோ வந்தார். அப்போது, தன்னுடைய காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் தனியாக நிறுத்தினார்.
இதை பார்த்த தியேட்டர் மேனேஜர் மரி அலெக்சாண்டர், பார்க்கிங்கில் கொண்டு போய் காரை நிறுத்துமாறு மில்லரிடம் சொல்லி உள்ளார். இதற்கு மில்லர் மறுப்பு தெரிவிக்கவும், 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு தகராறு முற்றியது.

தியேட்டர்
பின்னர், கூடவே மனைவி நின்றிருந்ததால், "இரு உன்னை வந்து கவனிச்சிக்கறேன்" என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார். பின்னர், படம் முடியும் நேரத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த கூலிப்படையினர் 12 பேரை தியேட்டருக்கு வரவழைத்து, மரிஅலெக்சாண்டரை அவர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளார்.

நொறுக்கினர்
இதில் அந்த கூலிப்படையினர் மேனேஜரை விரட்டி, விரட்டி தாக்கி உள்ளனர். மேலும் தியேட்டரில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து நொறுக்கினர். அப்போதும் ஆவேசம் அடங்காமல், மேனேஜரின் கையை முறித்து உடைத்தனர்.

சிகிச்சை
இந்த நேரத்தில், அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ரோந்து போலீஸார், உடனடியாக விரைந்து சென்று மேனேஜரை காப்பாற்றினர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடியது. ரவி அலெக்சாண்டரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து, தியேட்டரில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்க்கும்போது, தியேட்டரையே துவம்சம் செய்திருந்தது தெரியவந்தது.

கைது
இதன் அடிப்படையில், மில்லர் கைது செய்யப்பட்டார். இவருடன் சந்தோஷ், நிவாஷ், அரவிந்தராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த கும்பலில் முக்கிய நபராக வக்கீல் பிரபு உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications