சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து குவிந்த புகார்.. பதிலளிக்க கோரி நோட்டீஸ்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சிதம்பர நடராஜர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெறப்பட்ட புகார்கள் குறித்து தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தீட்சிதர்கள் சபைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பக்தி இலக்கியங்களில் பாடப்பெற்று புனிதத் தலமாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள் கோயில் நிர்வாகம் குறித்து தொடர் புகார்களை எழுப்பியுள்ளனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த அறநிலையத்துறை விசாரணைக்குழுவை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் 20,21 ஆகிய தேதிகளில் இத்திருக்கோயிலில் அக்கறை கொண்டவர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.

தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் வந்த கருத்துக்களின் அடிப்படையில் மொத்தம் 19,405 புகார் மனுக்கள் பெறப்பட்டன. மொத்த மனுக்களில் 14,098 மனுக்கள் கோயிலில் புகார்கள் இருப்பதை உறுதி செய்தது. புகார் மனுவில் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவது, குழந்தை திருமணம் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வசதியையும் செய்து தராமல் இருப்பது, ஆண்டாள் சிலையை எடுத்து மறைத்து வைத்திருப்பது, பக்தர்களை தரக்குறைவாக நடத்துவது, நன்கொடைகளுக்கு உரிய ரசீது தரப்படாமல் இருப்பது, நந்தனர் நுழைந்த தெற்கு கோபுர வாயிலை அடைத்து தீண்டாமையை பின்பற்றதுவது என 28 முக்கிய புகார்கள் அறநிலையத்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து இந்த புகார்கள் குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொது தீட்சிதர்கள் சபை செயலாளருக்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக கோயிலில் உள்ள நகைகளை சரிபார்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை வரும் 25ம் தேதி கோயிலுக்கு வர உள்ளதாக கடந்த 19ம் தேதி கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தது. இதற்கு கோயில் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "கோயிலின் நகைகள் மற்றும் கணக்கு வழக்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சட்ட விதிகளின்படி கோயிலின் நகைகள் கங்காணம் 20 நபர்களின் கூட்டுப்பொறுப்பில் உள்ளதாகவும் தற்போது உறுப்பினர்கள், வழக்கறிஞர், தணிக்கையாளர் ஆகியோர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்திற்கு பின்னர் ஆய்வுக்கு வரலாம் என்றும், வருவதற்கு முன்னரே தேதியை அறிவித்துவிட்டு வர வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications