நோயாளிக்கு நேர்ந்த துயரம்.. கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு.. விசாரணை குறித்து பேட்டி
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் பறிக்கப்பட்டதால் நோயாளி மரணம் அடைந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம்
கடலூர் அரசு மருத்துவமனையை இன்று ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், விசாரணைக்கு பின் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி நடு வீதியில் வசித்து வந்தவர் ராஜா (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 8ம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நோயாளியிடம் பறிப்பு
நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (20.5.2021) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை வேறு ஒருவரை காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொண்டு வெளியேறியதாக புகார் எழுந்தது.

மனைவி கதறல்
அதை தடுக்க முயன்ற ராஜாவின் மனைவியை (தடுத்துவிட்டு வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் அவரது மனைவி புகார் செய்துள்ளார். அத்துடன் ராஜாவின் மனைவி கஸ்தூரி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து கொஞ்ச நேரத்தில், அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் வீடியோ பரவியது.

நடவடிக்கை தேவை
இது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி இருந்தார்.

நடவடிக்கை உறுதி
இதனிடையே இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கடலூர் அரசு மருத்துவமனையைதீடீர் ஆய்வு செய்தார் . அப்போது பேசிய அவர், ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்கில் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாள் 1 க்கு 4 கிலோ ஆக்ஸிஜன் இருமுறை ஆக்ஸிஜன் டேங்கினை நிரப்ப வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பேன். தற்போது 60 ஆக்ஸிஜன் பெட் தயார்நிலையில் உள்ளது. கூடுதலாக 100 ஆக்ஸிஜன் பெட் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று கொரொனா நோயாளி இறந்த பிரச்சனை தொடர்பாக விசாரனை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications