கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதம்பரம் கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு...பெண்ணை தாக்கியது உண்மையா? - தீட்சிதர் விளக்கம்

Google Oneindia Tamil News

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பல மேடை மீது யாரும் ஏறக்கூடாது என எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். அது தவறானது என்று பாதிக்கப்பட்ட கணேஷ் தீட்சிதர் மகன் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவே கனக சபைக்கு மேல் நின்று பெண்மணியை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ள தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை ஜாதி பெயரை சொல்லி விரட்டியடித்த தீட்சிதர்கள்! - என்ன நடந்தது

    சிதம்பரம் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணேஷ் தீட்சிதர் என்பவரும் கனகசபைக்கு மேலே நின்று சாமி தரிசனம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதனால் சக தீட்சிதர்கள் அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, கணேஷ் அளித்த புகாரின் பேரில் 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இருந்தனர் காவல்துறையினர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை ஜாதி பெயரை சொல்லி விரட்டியடித்த தீட்சிதர்கள்!பாய்ந்த வழக்குசிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பெண்ணை ஜாதி பெயரை சொல்லி விரட்டியடித்த தீட்சிதர்கள்!பாய்ந்த வழக்கு

    இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பலம் மேடை மீது ஏறி சாமி கும்பிட முயன்ற பெண்னை தடுத்து சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் கூறப்பட்டது இந்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் பெண் கொடுத்த புகாரின் பேரில் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சுமார் 20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

     பின்னணி என்ன?

    பின்னணி என்ன?


    இந்நிலையில் சிதம்பரம் கோவிலைச் சேர்ந்த தீட்சிதர் வெளியிட்டுள்ள வீடியோவில், " கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவே கனக சபைக்கு மேல் நின்று பெண்மணியை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.
    கடந்த ஆண்டு ஒரு பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தீட்சிதர் ஒருவரை 2 மாதங்கள் சஸ்பெண்ட் செய்திருந்தோம். தற்போது பழிவாங்கும் நோக்கத்துடனேயே அவர் இப்படி செயல்பட்டு வருகிறார்.

    பொய் புகார்

    பொய் புகார்

    அந்தப் பெண்மணியை கோவில் கருவறைக்குள் அழைத்துச் செல்ல அவர் முயற்சித்தார். அதனால் அவரை மீண்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். அதன் காரணமாகவே, அந்தப் பெண்ணை தீட்சிதர்கள் தாக்கியதாக அவர் கூறி வருகிறார் என்று ஒரு தரப்பு தீட்சிதர்கள் தெரிவித்து வருவதாக கூறினார்.

    அனைவரும் சாமி தரிசனம்

    அனைவரும் சாமி தரிசனம்

    இந்த சம்பவம் குறித்துப் பேசிய கணேஷ் தீட்சிதர் மகன் தர்சன் தீட்சிதர், நடராஜர் கோவிலின் சிற்றம்பல மேடை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். அது தவறானது. சிற்றம்பல மேடையின் மீது ஏறி அனைவரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றார்.

    சர்ச்சை முடிவுக்கு வருமா?

    சர்ச்சை முடிவுக்கு வருமா?

    சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தீட்சிதர்கள் ஏற்பட்டுள்ள பிரச்சினை தமிழகத்தில் ஆன்மீகவாதிகளிடையே விவாதப்பொருளாகி வருகிறது.

    English summary
    How can Chidambaram issue an order that no one should climb on the Chitrambala platform of the Natarajar temple? The Dikshits have said that it is wrong. Dixit said that it was our wish that everyone on the Chirambala platform should perform Sami darshan and that women were not allowed to stand above the Kanaka Sabha due to corona restrictions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X