பெரும் பதற்றம்! சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது பாய்ந்த வழக்கு! பெண் அதிகாரி பரபர புகார்
கோவை: தந்தை பெரியார், கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் உமா கார்கியின் ஜாமின் மனுவை கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த பாஜக ஆதரவாளரான உமா கார்கி சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வந்தார். அத்துடன் திமுக உள்ளிட்ட கட்சிகளையும், அதன் தலைவர்களையும் கடுமையான வறம்பு மீறி விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக தந்தை பெரியார், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி நடிகர் விஜய் வரை யாரையெல்லாம் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று நினைக்கிறாரோ அவர்களை எல்லாம் இவர் ட்விட்டரில் கடுமையான சொற்களை கொண்டு விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் உமா காரியின் சமூக ஊடக செயல்பாட்டை பாராட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவருக்கு சிறந்த விருதை வழங்கினார். இதற்கிடையே பெரியார், கருணாநிதி, முக ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் திமுகவினர் புகாரளித்தனர்.
இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா கார்கியை கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாஜக ஆதரவாளர் உமா கார்கியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழாவுக்கு பிறகு அவரை பற்றி அவதூறாக உமா கார்கி பதிவிட்டதாக கூறி சென்னை போலீசில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உமா கார்கி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உமா கார்கி சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்குமாறு உமா கார்கி கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உமா கார்கியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications