கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நீட் தேர்வு ரத்து ரகசியம்" என்ன தெரியுமா.. பிரச்சாரத்தில் போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

கடலூர்: தமிழகத்தில் திமுக இருக்கும் வரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். இது திமுகவிற்கும் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி மாநிலம் முழுவதும் நேரடித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேயர்கள், நகராட்சிக் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மறைமுகத்தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல் முடிந்து விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுகவை உதயநிதி நிர்வகிப்பார்.. 2 மாதத்தில் அமைச்சராகிறார்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு தகவல் திமுகவை உதயநிதி நிர்வகிப்பார்.. 2 மாதத்தில் அமைச்சராகிறார்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு தகவல்

கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி

திமுக தலைவர் மற்றும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அதிக அளவு தடுப்பூசி போட்டதால் மட்டுமே மூன்றாவது அலையில் பெரிய பாதிப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த எட்டு மாதத்தில் மூன்று மாதங்கள் கொரோனா உடன் போராட்டமாக இருந்தது. இதையடுத்து திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடை மூலம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு தொகுப்பு என தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததும் வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது உதயநிதி ஸ்டாலின் காணாமல் போய் விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அவர் தன்னையே காணோம் என காவல்நிலையத்தில் புகார் அளிப்பார் என்றார். நான் கரூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் மக்களோடு மக்களாக பயணித்து திமுக அரசு செய்த சாதனைகளை கூறி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறேன். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னை தேடி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

 நீட் தேர்வு ரகசியம்

நீட் தேர்வு ரகசியம்

அவர் ஏன் தேடுகிறார் என்றால் நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன் ரகசியத்தை நான் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தேடுகிறார்.நீட் தேர்வு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன். அது என்னவென்றால், அதிமுகவைப் போல நாங்கள் பாஜகவுக்கு அடிமையாக இல்லாமல், போராடி வெற்றி பெறுவோம். இதுதான் ரகசியம். நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக பச்சை அயோக்கியத்தனம் செய்திருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது கூட அதிமுகவினர் மறைத்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.அவர் ஏன் தேடுகிறார் என்றால் நீட் தேர்வு ரத்து என்ற வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன் ரகசியத்தை நான் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தேடுகிறார்.நீட் தேர்வு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன். அது என்னவென்றால், அதிமுகவைப் போல நாங்கள் பாஜகவுக்கு அடிமையாக இல்லாமல், போராடி வெற்றி பெறுவோம் என்று கூறினார். நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக பச்சை அயோக்கியத்தனம் செய்திருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது கூட அதிமுகவினர் மறைத்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

மக்கள் ஆதரவுடன் வெற்றி

மக்கள் ஆதரவுடன் வெற்றி

தொடர்ந்து பேசிய உதயநிதி, நாங்கள் அதிமுகவை போல கூவத்தூர் போய் சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொன்னார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ராகுல்காந்தி சவால்

ராகுல்காந்தி சவால்

நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக இருக்கும் வரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்து இருக்கிறார். இது திமுகவிற்கும் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று சொல்லிவிட்டு, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் திமுக ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்.

English summary
Tamil nadu local body election 2022:( தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022) Rahul Gandhi has challenged Prime Minister Modi that there is nothing you can do as long as the DMK is in Tamil Nadu. Udayanithi Stalin said that this is a great honor for DMK and Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X