கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம்...விருத்தாசலத்தில் நண்பனையே கத்தியால் குத்தி கொன்ற இளைஞர்
கடலூர்: ஒரே பெண்ணுடன் இருவருக்குமே கள்ளக்காதல், யார் உறவில் இருப்பது என்பதில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விவகாரத்தில் நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தால் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நபிஸ் என்பவரின் வீட்டில் நேற்று இரவு நபிஸ், மனோஜ் பிரேம்குமார், கலைச்செல்வன் மற்றும் உயிரிழந்த அருண்ராஜ் உள்ளிட்டோர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது வாய் தகராறு ஏற்பட்டதில் பிரேம்குமார் அருனை இடுப்பு பகுதியில் கத்தியால் குத்திய தாக கூறப்படுகிறது. ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த அருணை காப்பாற்ற நண்பர்கள் வீட்டில் இருந்து மெயின் சாலைக்கு அருணை தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்துள்ளனர்.

சிகிச்சை
பின்பு மனோஜ் என்பவர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார், ஆம்புலன்ஸ் வந்தவுடன் ரத்தவெள்ளத்தில் இருந்த அருன்ராஜை ஆம்புலன்சில் நண்பர்கள் ஏற்றி அனுப்பியுள்ளனர். மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அருண்ராஜ் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யார் அந்த இளைஞர்
இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆண்டிமடம் தென்னூர் பகுதியை சேர்ந்த ஏசுராஜ் மகன் அருண்ராஜ் (25 வயது) தான் கொல்லப்பட்ட இளைஞர் என்பது தெரியவந்தது. நீண்ட காலமாக அவரது பெற்றோர்கள் விருத்தாசலம் பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

நண்பர்கள்
இந்நிலையில், அருண்ராஜ்க்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தனது சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். அவ்வபோது விருத்தாசலம் வந்து தன் தாயார் பார்த்ததுடன், தன் நண்பர்களை சந்தித்து வந்துளளார். பிரேம்குமார், மனோஜ், கலைச்செல்வன், மற்றும் அருண்ராஜ் ஒன்றாக படித்த நண்பர்கள். நான்கு பேரும் நெடு நாட்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளார்கள்.

கள்ள உறவு
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த மீன்கார பெண் ஒருவருடன் பிரேம்குமார் , அருண்ராஜ் இருவருக்கும் கள்ள உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆத்திரத்தில் இருந்த பிரேம்குமார் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள மனோஜ் ஆகியோர் கலைச்செல்வனின் நண்பன் நபிஸ் என்பவரின் வீட்டில் மது அருந்தி உள்ளனர். பிறகு, அய்யம்பேட்டையில் இருந்த அருண்ராஜை மது அருந்த வாருமாறு வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.

கொலை
அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு பிரேம்குமார் அருண்ராஜை வயிற்று பகுதியில் கத்தியால் குத்திதாக கூறப்படுகிறது. ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த அருணை காப்பாற்ற நண்பர்கள் வீட்டில் இருந்து மெயின் சாலைக்கு அருணை தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்துள்ளனர். பின்பு மனோஜ் என்பவர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளார், ஆம்புலன்ஸ் வந்தவுடன் ரத்தவெள்ளத்தில் இருந்த அருன்ராஜை ஆம்புலன்சில் நண்பர்கள் ஏற்றி அனுப்பியுள்ளனர். மேலும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அருண்ராஜ் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருத்தாச்சலம் போலீஸ்
இதனையடுத்து, விருத்தாசலம் போலீசார் மனோஜ், கலைச்செல்வன் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பிரேம்குமார் மற்றும் நபிஸ் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் விருத்தாலசம் பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications