கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்ணின் கன்னத்தில் அறைந்த அர்ச்சகர்.. தலைமறைவாகி தப்பி ஓட்டம்.. 2 மாதம் பூசை செய்ய தடை!

பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு பூஜை செய்ய 2 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்! அறைந்த தீட்சிதர்

    சிதம்பரம்: ஏன் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்ட பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. இந்நிலையில், பெண்ணை தாக்கிய அந்த தீட்சிதர் 2 மாசம் பூஜை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரத்தை சேர்ந்த செல்வகணபதி என்பவரது மனைவி லதா. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸ்-ஆக வேலை பார்க்கிறார்.

    இவரது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். அப்போது பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய சென்றிருக்கின்றார்.

    தர்ஷன்

    தர்ஷன்

    அங்கிருந்த அர்ச்சகர் தர்ஷனிடம் தேங்காய், பழத்தை கொடுத்து, மகனின் ராசி, நட்சத்திரத்தையும் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டு கொண்டு சென்ற அர்ச்சகர் சிறிது நேரத்தில் அர்ச்சனை ஏதும் செய்யாமல் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து கொண்டு வந்து லதாவிடம் தந்திருக்கிறார்.

    கர்ப்பிணிதான்.. ஆனால் நாங்களும் நல்லா ஓடுவோம் சார்.. ப்ளீஸ் அனுமதி கொடுங்க.. ஸாரி ரிஜக்டட்!கர்ப்பிணிதான்.. ஆனால் நாங்களும் நல்லா ஓடுவோம் சார்.. ப்ளீஸ் அனுமதி கொடுங்க.. ஸாரி ரிஜக்டட்!

    லதா

    லதா

    இதுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை என கேட்ட லதாவை, அர்ச்சகர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.. இதனால் இருவருக்குமே வாக்குவாதம் தொடங்கி உள்ளது.. தேங்காயை உங்கள் கையால் வாங்கமாட்டேன் எனக் லதா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சகர், லதாவை கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார். இதில் லதா அங்கேயே சுருண்டு விழுந்தார். இவ்வளவும் கோயில் சன்னிதானத்திலேயே நடந்தது.

    தலைமறைவு

    தலைமறைவு

    இதை அங்கிருந்த பக்தர்களே பார்த்துள்ளனர்.. இதை பற்றி கேட்டதற்கு அந்த பெண் தன்னுடைய செயினை பறிக்க வந்ததாகவும் அதனால்தான் அறைந்ததாகவும் காரணம் சொல்லியுள்ளார்.உடனடியாக லதா போலீசில் அர்ச்சகர் தன்னை அறைந்தது பற்றி புகார் சொன்னார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக உருவெடுத்தையடுத்து, அர்ச்சகர் மாயமாகிவிட்டார்... அர்ச்சகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    கண்டனங்கள்

    கண்டனங்கள்

    தர்ஷனை கண்டித்து வரும் வியாழக்கிழமை தெற்கு சன்னதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கோரி செவிலியர் சங்கம் சார்பில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதைதவிர, பலரும் அர்ச்சகரின் செயலுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    சஸ்பெண்ட்

    சஸ்பெண்ட்

    இந்நிலையில் அர்ச்சகர் தர்ஷன் திருக்கோவில் பணியிலிருந்து 2 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படுவதாக பொது தீட்சிதர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், அர்ச்சகருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். எனினும் விரைவில் அர்ச்சகரை போலீசார் கைது செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    theeksithar dharshan beats woman who argues to perform archanai in chidambaram temple, and he is forbidden to perform to pooja for 2 months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X