வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படை.. காஷ்மீரில் ஒரே ஆண்டில்.. 172 தீவிரவாதிகள் துப்பாக்கிக்கு இரை!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 172 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் முழுவீச்சில் களம் இறங்கியதன் காரணமாக, ஒரே ஆண்டில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டுள்ளனர்.
முக்கியமாக, தீவிரவாத இயக்கங்களில் புதிதாக சேரும் இளைஞர்களை குறிவைத்து கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் ஈடுபட்டுள்ளனர்.

தலைதூக்கிய தீவிரவாதம்
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அங்கு தீவிரவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டது. இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்தது காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உத்வேகம் அளித்ததால் அங்கு மீண்டும் தீவிரவாதிகளின் அராஜகம் தலைதூக்கியது.

வேட்டையில் இறங்கிய பாதுகாப்புப் படை
காஷ்மீருக்கு திரும்ப மாநில அந்தஸ்து வழங்க, மத்திய அரசை பணிய வைக்கும் விதமாக அங்கு தீவிரவாதிகள் அராஜகத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள், காஷ்மீர் பண்டிட்டுகள், காவல்துறையில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் காவல்துறை, சிஆர்பிஎப், ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

ஒரே ஆண்டில் 172 தீவிரவாதிகள்
அந்த வகையில், கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டர்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த ஒரே ஆண்டில் காஷ்மீரில் 172 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காஷ்மீர் ஏடிஜிபி விஜய்குமார் கூறுகையில், "கடந்த ஆண்டில் காஷ்மீரை சேரந்த தீவிரவாதிகள் 130 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 42 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

புதிய தீவிரவாதிகளே குறி
மொத்தம் 93 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 108 தீவிரவாதிகள் இந்த என்கவுன்ட்டர் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை பொறுத்தவரை, பயங்கரவாத இயக்கங்களில் சேரும் புதிய தீவிரவாதிகளே எங்களின் குறியாக இருந்தார்கள். கடந்த ஆண்டு பயங்கரவாத இயக்கங்களில் 100 பேர் சேர்ந்தனர். அவர்களில் 65 பேர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த அடுத்த மாதமே கொல்லப்பட்டனர். 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்" என விஜய்குமார் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications