ஸ்பீடு எடுக்கும் அரசு.. 2 "டோஸ்" தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கை.. 22 கோடியை எட்டுகிறது
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
டெல்லி: இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் எண்ணிக்கை 22 கோடியை எட்டுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டுதானிருக்கிறது.. முழுமையான கட்டுப்பாட்டுக்குள் உலக நாடுகளில் வரவில்லை.. இந்தியாவிலும் இதே நிலைமைதான்.
இப்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு கை கொடுத்து வருகின்றன.. அந்த வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது..

3வது அலை பரவல்
2-ம்அலை பரவலில் நிறைய உயிரிழப்புகளை சந்தித்ததையடுத்து, மக்களிடம் ஒருவித பீதி ஏற்பட்டு வருகிறது. 3வது அலைபரவலும் வர போகிறது என்பதால், இந்த கலக்கம் அதிகரித்து வருகிறது.. அதற்கேற்றபடி, தடுப்பூசி போடும் பணிகள் மெல்ல வேகமெடுத்துள்ளது... எப்படியும் இந்த வருட இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

தடுப்பூசி
சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவில் தடுப்பூசி பணிகள் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியா மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது... அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 66% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது... அதேபோல 18+ நபர்களில் கிட்டதட்ட 25% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றார்.

முதல் டோஸ்
ஆனால், இப்போது இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் இதுவரை 84 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 26 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதில், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 62 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 393 ஆகும்...

2வது டோஸ்
2 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 22 கோடியை நெருங்குகிறது. 21 கோடியே 86 லட்சத்து 15 ஆயிரத்து 633 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.. கடந்த 24 மணி நேரத்தில் 72 லட்சத்து 20 ஆயிரத்து 642 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்... இவர்களில் 41 லட்சத்து 99 ஆயிரத்து 612 பேர் முதல் டோஸும், 30 லட்சத்து 21 ஆயிரத்து 30 பேர் 2வது டோஸும் போட்டுக்கொண்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications