2019 லோக்சபா தேர்தலில் பாஜகவை பூஸ்ட் செய்த பேஸ்புக் பிரச்சாரம்! பின்னணியில் ரிலையன்ஸ்: சர்வதேச ஊடகம்
டெல்லி: 2019 லோக்சபா தேர்தலின் போது ஃபேஸ்புக் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததை அம்பலப்படுத்தியுள்ளது Aljazeera ஊடகம்.
இது தொடர்பாக The Reporters' Collective, ad.watch ஆகியவற்றின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு Aljazeera வெளியிட்டுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
2019 லோக்சபா தேர்தலின் போது NEWJ என்ற விளம்பர நிறுவனம் பாஜகவை எதிர்க்கும் தலைவர்கள் தொடர்பான அவதூறு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. உதாரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாரை, மசூத் அசார்ஜி குறிப்பிட்டு பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டது. நான்கு நாட்களில் இந்த வீடியோவுக்கு 650,000 வியூஸ் கிடைத்தது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபாவை பாகிஸ்தான் ஆதரவாளர் என முத்திரை குத்தி இன்னொரு வீடியோ வெளியிட்டது.

2019 தேர்தலுக்கு முந்தைய சில மாதங்களில் தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசின் திட்டங்களை பாராட்டுகிற வீடியோக்களையும் ஃபேஸ்புக் விளம்பரம் மூலம் வெளியிட்டது NEWJ.அதன்பின்னர் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவைகளில் மத்திய அரசுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்கள் குறித்து வீடியோக்களை வெளியிடுவதை இந்த நிறுவனம் வாடிக்கையாக வைத்திருக்கிறது.
சரி இந்த NEWJ நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு? 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் NEWJ என்ற நிறுவனம் ரூ1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் Reliance Industrial Investment and Holdings Limited என்கிற ரிலையன்ஸ் குழும நிறுவனம் NEWJ-ன் 75% பங்குகளை வாங்கியது. இந்த நிறுவனத்தில் ரூ8.4 கோடி முதலீடு செய்தது ரிலையன்ஸ் குழுமம். சமூக வலைதளங்களில் பாஜகவை ஆதரித்து பதிவிடுவதற்கான வீடியோக்களை உருவாக்குவதுதான் இந்த நிறுவனத்தின் பணி. குறிப்பாக ஃபேஸ்புக், யூ டியூப்களில் இத்தகைய வீடியோக்களை பதிவிட்டு வருகிறது NEWJ நிறுவனம்.2019-ம் ஆண்டு NEWJ நிறுவனத்தில் மேலும் ரூ12.5 கோடி முதலீடு செய்தது ரிலையன்ஸ் குழுமம். பின்னர் Reliance Industrial Investment and Holdings Limited நிறுவனத்தை Jio Platforms Ltd என்ற மற்றொரு ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தியது. NEWJ உருவாக்கும் வீடியோக்கள்,ஃபேஸ்புக்கில் பணம் செலுத்தி விளம்பரங்களாக வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக Aljazeera நிறுவனமானது NEWJ-விடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள NEWJ,2019 தேர்தலுக்குப் பின்னரும் எங்களது பணிகள் தொடருகிறது. ஒரு தனிநபரின் கருத்துகள் வீடியோக்களாக உருவாக்கப்படுவது இல்லை. கூட்டு முயற்சியாகத்தான் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன என விளக்கம் தந்துள்ளது.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications