• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிளாஷ் பேக் 2020: லாக்டவுனால் சுத்தமான உலகம் 7% குறைந்த கார்பன் உமிழ்வு

|

டெல்லி: 2020ஆம் ஆண்டை கொரோனா ஆண்டு என்று சொன்னால் மிகையாகாது உலக மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது கொரோனா. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர். வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. காற்றின் தரம் உயர்ந்தது. இந்த ஆண்டு கார்பன் உமிழ்வு 7சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

காற்று மாசு இன்றைக்கு அதிகம் பேசப்படும் பொருளாக உள்ளது. கொரோனா காலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் உலகத்தில் பல இடங்களில் மக்கள் வாகன பயணத்தை நிறுத்தினர் வீட்டிற்குள் ஓய்வெடுத்தனர். உறவினர்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.

2020 Flash back: In pandemic hit 2020, world records biggest ever drop in carbon dioxide emissions

உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாத காரணத்தால் வாகனப் போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது. உலகம் இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பல நாடுகளில் இன்னமும் லாக்டவுன் முழுமையாக அகற்றப்படவில்லை.

லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. இதனை பல ஆய்வுகள் கூறி உள்ளன. உலகளாவிய கார்பன் உமிழ்வு குறித்து குளோபல் கார்பன் திட்டம் தனது ஆய்வு முடிவு மற்றும் மதிப்பீடுகளை இன்று வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கார்பன் உமிழ்வு குறைந்ததில் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகித்துள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில் கார் பயணங்களினால் ஏற்படும் உமிழ்வு ஏறக்குறைய பாதியாக குறைந்தாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது, கொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டில் தொழிற்சாலைகள் இயங்க வில்லை. வாகன போக்குவரத்து கணிசமாககுறைந்து உள்ளது. இதனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் நச்சு கார்பன்டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்து உள்ளது என ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மைய லவுரி மைலிவிர்தா மற்றும் சுனில் தஹியா ஆகியோர் கடந்த மே மாதம் தெரிவித்தனர்.

சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் மறைவு - இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்ததால், 2020 ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு 7 சதவிகிதம் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் தொழில்துறையிலிருந்து உமிழ்வு 34 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சமமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் குழு கூறியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் உலகம் 37 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை காற்றில் செலுத்தியிருக்கும் என்று உமிழ்வைக் கண்காணிக்கும் சர்வதேச விஞ்ஞானிகளின் அதிகாரப்பூர்வ குழுவான குளோபல் கார்பன் திட்டம் கணக்கிட்டது.

இது 2019 ஆம் ஆண்டில் 40.1 பில்லியன் மெட்ரிக் டன் ஆக இருந்தது. 36.4 பில்லியன் மெட்ரிக் டன் ஆக இந்த ஆண்டு குறைந்துள்ளது என்று வியாழக்கிழமை எர்த் சிஸ்டம் சயின்ஸ் டேட்டா இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த வீழ்ச்சி முக்கியமாக மக்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதாலும், கார் மற்றும் விமானத்தில் குறைவாகப் பயணிப்பதாலும், மற்றும் தொற்றுநோய் முடிந்தபின் உமிழ்வுகள் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்பன் உமிழ்வை பொருத்தவரை அமெரிக்காவில் 12 சதவிகிதம் குறைந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தில் 11 சதவிகிதம் குறைந்துள்ளது. சீனாவில் பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், 2020ஆம் ஆண்டில் கார்பன் உமிழ்வு வெறும் 1.7 சதவிகிதம் மட்டுமே குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் - கோவை மக்கள் புகழஞ்சலி

2020 ஆம் ஆண்டின் வீழ்ச்சியுடன் கூட, உலகம் சராசரியாக ஒவ்வொரு நொடியும் 1,185 டன் (1,075 மெட்ரிக் டன்) கார்பன் டை ஆக்சைடை காற்றில் செலுத்துகிறது. அதே ஆய்வில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான இறுதி புள்ளிவிவரங்கள், 2018 முதல் 2019 வரை பிரதான மனிதனால் உருவாக்கப்பட்ட வெப்ப வாயுவின் உமிழ்வு 0.1% மட்டுமே அதிகரித்துள்ளது, இது ஒரு தசாப்தத்திற்கு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3% வருடாந்திர உயர்வை விட மிகக் குறைவு.

தொற்றுநோய்க்குப் பிறகு உமிழ்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2019 கார்பன் மாசுபாட்டின் உச்சமாக இருக்குமா என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள் என்று லெக்யூர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான நாடுகளிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில் உலக வானிலை கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2019ல் உலகில் வளிமண்டலத்தில் நிலவிய கார்பன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டு அளவுடன் ஒப்பிடும் போது, 2020ல் 7.5 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால் இந்த அளவிலான குறைவு போதுமானதல்ல என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
English summary
It is no exaggeration to say that 2020 is the year of the Corona. The Corona kept the people of the world under its control. People were paralyzed indoors as the lockdown was implemented from March to control the spread of the virus. Vehicular traffic was restricted. The air quality was high. Carbon emissions are down 7 percent this year, according to a study.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X