என்னாச்சு.. இந்தியாவில் திடீரென அதிகரித்த கொரோனா பாதிப்பு.. நேற்றை விட 18.4% அதிகம்!
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 31,923 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. இது நேற்றைய பாதிப்பை விட 18.4% அதிகமாகும். இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.
ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடு படாதபாடு பட்டது. இதன்பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா குறைந்து விட்ட போதிலும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. நாட்டில் கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

31,923 கொரோனா பாதிப்புகள்
மாகாராஷ்டிரா மாநிலத்திலும் அதிக தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 31,923 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. இது நேற்றைய பாதிப்பை விட 18.4% அதிகமாகும். நேற்று 26,964 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. மொத்த கொரோனா
பாதிப்பு எண்ணிக்கை 3,35,63,421 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 282 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்த உயிரிழப்பு 4,46,050 ஆக இருக்கிறது.

கேரளாதான் பர்ஸ்ட்
நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,01,640 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,675 பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. 142 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 19,702 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 4,81,195 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

மிக குறைவு
மகாராஷ்டிராவில் 3,608 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 48 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ., மகாராஷ்டிராவில் மொத்த தொற்று எண்ணிக்கை 65,31,237 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 39,984 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் செயலில் உள்ள மொத்த நோய்த்தொற்றுகளில் 0.90 சதவிகிதம் ஆகும், இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மிகவும் குறைவானதாகும். கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் விகிதம் 97.77 சதவிகிதம் ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு மிக அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாசிட்டிவ் ரேட்
கடந்த 23 நாட்களாக நாட்டில் கொரோனா நேற்மறை விகிதம்(பாசிட்டிவ் ரேட்)மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தற்போது கொரோனா பாசிட்டிவ் ரேட் 2.09 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக பாசிட்டிவ் ரேட் இருக்கிறது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 83.39 கோடி பேருக்கு தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications