உக்ரைனில் இருந்து 6,200 பேர் இந்தியா திரும்பினர்...அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவோம் - அரசு
உக்ரைனில் இருந்து 6,200 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: உக்ரைனில் இருந்து 6,200 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த 2 நாட்களில் 7,400 பேர் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு அதிகாரப்பூர்வ போரை தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், சற்றும் தொய்வின்றி ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் கீவ்விலும், 2வது பெரிய நகரமான கார்கிவ்விலும் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
அங்கிருந்து பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்காக உக்ரைன் நேரப்படி நேற்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்றும், எந்த போக்குவரத்தும் கிடைக்கவில்லை என்றால் நடந்தாவது அங்கிருந்து வெளியேறுங்கள் என்று அவசர எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தது. ஆனால் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்களை உக்ரைன் படைகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அதில், எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, உக்ரைனை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துள்ளனர் என்று ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால் அவர்கள் பணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய ராணுவம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் இருந்து தனது சொந்த ராணுவ விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். அப்போது கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப உதவவேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இந்தச் சூழலில் இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய மாணவர்களின் பெற்றோர் கலக்கமடைந்தனர்.
இதனிடையே உக்ரைனில் யாரு பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து மாணவ மாணவர்களும் பத்திரமாக தாயகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து இதுவரை 6,200 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அடுத்த 2 நாட்களில் 7,400 பேர் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வரை 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 30 விமானங்களில் தற்போது வரை 6,400 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என கூறினர். அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்களை அழைத்து வர 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளோம். உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை முடக்கிமேற்கோண்டு வருகிறோம். வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அதிக அளவில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
அப்போது ஏராளமான இந்தியர்கள் வீடு திரும்புவார்கள். இந்த போர் சமயத்திலும் உக்ரைன் அரசு இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்கு பாராட்டுக்கள். இந்திய மக்களுக்காக எல்லைகளை திறந்து அண்டை நாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். எங்களின் எச்சரிக்கையை தொடர்ந்து ஏராளமான இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறியுள்ளனர். மேற்கு உக்ரைனில் எல்லையை கடக்க காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற தொடர்ந்து உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. ஆரம்பத்தில் 20,000 இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்தனர், கார்கிவ் இன்னும் சில நூறு இந்தியர்கள் இருக்கலாம் என நினைக்கிறோம், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், எங்களின் ஒரே எண்ணம் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தான் என்று தெரிவித்துள்ளார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications