டெல்லி சென்ற விமானம்... நடுவானில் 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்
டெல்லி: டெல்லிக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்த போதே 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாட்னாவில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 6 மாதக் குழந்தையை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இதயக் கோளாறை சரிசெய்யும் பொருட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தை அழைத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையறிந்த சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை அடைந்ததும் குழந்தையின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, துணை போலீஸ் கமிஷனர் (டெல்லி விமான நிலையம்) சஞ்சய் பாட்டியா கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 8481 விமானத்தில் பெண் குழந்தை இறந்துவிட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. பீகாரின் பெகுசாரை பூர்வீகமாகக் கொண்ட குழந்தை பிறவிலேயே, இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது இதயத்தில் ஒரு சிறிய துளை இருந்தது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பெற்றோர் விமானத்தில் அழைத்து வந்துள்ளனர் என்றார்.
இதனிடையே, மருத்துவ உதவிக்காக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவக் குழு , குழந்தையை பரிசோதித்ததில் இறந்து விட்டதாக தெரிவித்தனர் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications