டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை

இன்று புதிதாக 9,765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியாகியுள்ளது. மக்களுக்கு செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 125 கோடியை கடந்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,541 ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 125 கோடியை கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மீண்டும் லேசாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 551 நாளில் இல்லாதவகையில் 6,990 ஆக பதிவானது. நேற்றைய தினம் இந்த பாதிப்பு 28.1 சதவிகிதம் அதிகரித்து 8,954 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

9,765 confirmed for corona infection - 125 crore dose vaccine record

இந்நிலையில் இன்று புதிதாக 9,765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதில் கேரளாவில் மட்டும் 5,405 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,765 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,541 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,37,054 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.35 சதவிகிதம் ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 477 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,69,724 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.36 சதவிகிதம் ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி நாடு முழுவதும் தற்போது 99,763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,24,96,19,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80,35,261 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 10,98,611 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64,35,10,926 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்ட நிலையில், வழக்கமான சர்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு இந்தியா தயாரானது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இது 23 நாடுகளுக்கு பரவியுள்ளதால் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. எனவே சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தை மறு ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளை பிரதமர் மோடி கடந்த 27ஆம் தேதி அறிவுறுத்தி உள்ளார். அதைத் தொடர்ந்து திட்டமிட்டிருந்தபடி சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்காமல் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
In India, 9,765 new cases have been confirmed in the last 24 hours. This brings the total number of corona infections to 3,46,06,541. The number of corona vaccine doses given to the population has crossed 125 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X