டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''அமித்ஷாவை காணோம்.. கண்டா கையோடு கூட்டி வாருங்க''.. காவல் நிலையத்தில் புகார்.. அதிர்ந்த போலீசார்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்றும் அவரை கண்டால் வரச் செல்லுமாறும் போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம் மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்( என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளராக இருப்பவர் நாகேஷ் காரியப்பா. இவர் டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்

அமித்ஷாவை காணோம்

அமித்ஷாவை காணோம்

''நாடு முழுவதும் மக்கள் தொற்று நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்'' என்று புகார் மனுவில் கூறப்பட்டு இருந்ததால் போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் இந்திய தேசிய மாணவர் சங்க அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அரசியல்வாதிகள் கடமை

அரசியல்வாதிகள் கடமை

'உள்துறை அமைச்சரை காணவில்லை' என்.எஸ்.யு.ஐ உறுப்பினர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் விசாரிக்க வந்தோம் என்று போலீசார் தெரிவித்தனர். புகார் தெரிவித்தது குறித்து நாகேஷ் காரியப்பா கூறுகையில், ' நாடு ஒரு கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நெருக்கடியில் இருக்கும்போது, ​​முழு நாட்டிற்கும் பொறுப்புக் கூற வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும்.

அரசு பதில்கள் என்ன?

அரசு பதில்கள் என்ன?

அரசியல்வாதிகள் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும். நெருக்கடி சூழ்நிலையிலிருந்து ஓடக்கூடாது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த மற்றும் பொறுப்பான நபரை (அமித்ஷா) நீண்ட நாட்களாக காணவில்லை. அமித்ஷா இப்போது நாட்டின் உள்துறை மந்திரியா? இல்லை பா.ஜ.க உறுப்பினரா? எங்களின் புகார் தொடர்பாக அரசின் பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று நாகேஷ் காரியப்பா கூறினார்.

பா.ஜ.க ஆட்சியில் மோசம்

பா.ஜ.க ஆட்சியில் மோசம்

என்.எஸ்.யு.ஐ ஊடக பொறுப்பாளர் லோகேஷ் சுக் கூறுகையில், ' 2013-ம் ஆண்டு வரை அரசியல்வாதிகள் மக்கள் மது பொறுப்பாளர்களாக, அக்கறையாக இருந்தனர். ஆனால் 2014 ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் இந்த விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மக்களுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் காணாமல் போய் விடுகின்றனர்' என்று தெரிவித்தார்.

English summary
The commotion was sparked by a complaint lodged with the police that Union Home Minister Amit Shah was missing and would come back if found
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X