டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. மூன்றில் ஒருவருக்கு... மோசமான மனநல & நரம்பியல் பாதிப்பு... ஆய்வில் செம ஷாக்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் மூன்றில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் நரம்பியல் மற்றும் மனநல பாதிப்பு ஏற்படுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய என உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

அரியர் மாணவர்கள் 'ஆல் பாஸ்' ஏற்க முடியாது.. தேர்வு நடத்துங்கள்.. தமிழக அரசுக்கு, ஹைகோர்ட் உத்தரவு! அரியர் மாணவர்கள் 'ஆல் பாஸ்' ஏற்க முடியாது.. தேர்வு நடத்துங்கள்.. தமிழக அரசுக்கு, ஹைகோர்ட் உத்தரவு!

இதன் காரணமாகப் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளை அனைத்து நாடுகளும் மிக விரைவாக மேற்கொண்டு வருகிறது.

மூன்றில் ஒருவர்

மூன்றில் ஒருவர்

அதேநேரம் கொரோனா வைரஸ் புதிய வகை தடுப்பூசி என்பதால் இது குறித்த ஆய்வுகளையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் சுமார் 2.30 லட்சம் நோயாளிகளிடம் கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மூன்றில் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்குள் மன ரீதியிலான மற்றும் நரம்பியல் கோளாறுகள் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

14 பக்கவிளைவுகள்

14 பக்கவிளைவுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கும் இதுபோன்ற மனநல பாதிப்பிற்கும் என்ன தொடர்பு என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கவலை, மனச்சோர்வு என மொத்தம் 14 வகையான பாதிப்புகள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் பரவலாக காணப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

உடல் ரீதியிலான பிரச்சனை

உடல் ரீதியிலான பிரச்சனை

அதேநேரம் பக்கவாதம், மற்றும் பிற நரம்பியல் கோளாறுகள் மிக அரிதாகவே ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் பெரும்பாலான மக்களுக்கு மனச்சோர்வு போன்ற மன ரீதியிலான பக்கவிளைவுகளே கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மனச்சோர்வு எதனால் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் தெளிவாக தெரியவில்லை என்றாலும்கூட இதை முக்கிய பிரச்சனையாகவே கருத வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

தொடர்ந்து அதிகரிப்பு

தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடையும் நோயாளிகளுக்குப் பின் நாட்களில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் சுமார் 20% பேருக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இப்போது அது 34%ஆக அதிகரித்துள்ளது.

மன ரீதியிலான பாதிப்பு

மன ரீதியிலான பாதிப்பு

இது குறித்து ஆராய்ச்சியாளர் லியா மில்லிகன் கூறுகையில், கொரோனா வைரஸ் மக்களிடையே உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இது குறித்து உடனடியாக ஆய்வுகளை அதிகப்படுத்தி தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவில் இருந்து குணமடைபவர்களுக்கு ஏற்படும் மோசமான உடல் ரீதியிலான பாதிப்பு குறைவாக இருந்தாலும்கூட, மன ரீதியிலான பாதிப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.

English summary
Researchers found that Post Corona, patients suffer from neurological, mental disorders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X