அடேங்கப்பா சூப்பர்ங்க! 'கணவனின் நடத்தையை ஊருக்கு அம்பலப்படுத்திய பெண்'.. டிரெண்ட் ஆகும் விளம்பரம்!
டெல்லி: 'கணவர் தனக்கு தெரியாமல் வேறு பெண்ணுடன் பழகி வந்ததை பெண் ஒருவர் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து அவரது நடத்தையை ஊர் அறிய செய்துள்ளார். தற்போது இந்த விளம்பரம் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் அவற்றின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான பல விளம்பரங்களை நாம் பார்த்து இருப்போம்.
குறிப்பாக செல்லப்பிராணிகளை காணவில்லை.. என தொடங்கி பல விளம்பரங்கள் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் டிரெண்டிங் செய்யப்படும்.

கணவனை பழிவாங்க திட்டம்
அந்த வகையில், ஆஸ்திரேலியவில் உள்ள செய்தித்தாள் ஒன்றின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இணையத்தில் டிரெண்ட் ஆகி வரும் அந்த விளம்பரத்தில் என்னதான் இருக்குன்னு கீழ் காண்போம். ஏமாற்றி சென்ற கணவனை பழிவாங்க நினைத்த மனைவி, கணவனின் நடத்தையை உலகம் முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று திட்டமிட்டார்.

நூதன யோசனை
இதை எப்படி செய்யலாம் என்று யோசித்த ஜென்னி என்ற பெண்ணுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. நாம் ஏன், பத்திரிகையில் விளம்பரமாக வெளியிடக்கூடாது என்று தோன்றியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை அணுகி தனது கணவருக்கு எதிராக விளம்பரத்தை வெளியிட வைத்தார். Mackay and Whitsunday Life- என்ற செய்தித்தாளின் பேஸ்புக் பக்கத்தில் ஜென்னியின் விளம்பரம் வெளியானது.

இப்படிக்கு ஜென்னி...
அந்த விளம்பரத்தில், "அன்புக்குரிய ஸ்டீவ்.. நீங்கள் அந்தப் பெண்ணுடன் சந்தோசமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எந்த அளவுக்கு கேவலமான ஏமாற்றுக்காரர் என்பதை தற்போது ஊர் முழுக்க அறியும். இப்படிக்கு ஜென்னி... என்று கூறப்பட்டுள்ளது. இறுதியில் பின்குறிப்பு என்ற வாசகத்துடன், இந்த விளம்பரத்திற்கான கட்டணம் உங்கள் கிரெடிட் கார்டு மூலமே செலுத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் டிரெண்ட்
இந்த விளம்பரம் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் டிரெண்ட் ஆகத்தொடங்கியது. விளம்பரம் பற்றிய முழு விவரங்களை அளிக்குமாறு பப்ளிகேஷன் நிறுவனத்தை பலரும் போன் மூலமாகவும் கமெண்ட் வழியாகவும் தொடர்ந்து கேட்க தொடங்கினர். இதையடுத்து இது குறித்து விளக்கம் அளிக்க பப்ளிகேஷன் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி காலையில் வெளியான நியூஸ்பேப்பரின் 4-ம் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது.

ஏராளமான மேசேஜ்கள்
இந்த விளம்பரம் குறித்த விவரங்களை கேட்டு வாசகர்கள் ஏராளமான மேசேஜ்களை அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர். எனவே, அந்த விளம்பரம் பற்றி இங்கு தெளிவுபடுத்த இருக்கிறோம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதற்காக விளக்க குறிப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளது. அதில், "தங்களுக்கு ஸ்டீவ் என்ற நபர் யாரேன்றே தெரியாது. ஆனால், அவர் மிகவும் மோசமான நபர் என வெளிப்படையாக தெரிகிறது. ஜென்னி பற்றி எந்த விவரமும் நாங்கள் பகிரப்போவது இல்லை" என்று தெரிவித்துள்ளது.

நெட்டிசன்கள் கருத்து மழை
முழுபக்க விளம்பரமாக வெளியிடப்பட்ட இந்த விளம்பரம், சம்பந்தப்பட்ட ஸ்டீவை தவிர அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த விளம்பர பதிவுக்கு கீழேயும் நெட்டிசன்கள் பலரும் ஸ்டீவை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், ஜென்னியின் நடவடிக்கை துணிச்சலானது என்றும் பாராட்டுக்குரியது எனவும் பலரும் பதிவிட்டுள்ளனர். அதேபோல், ஸ்டீவிற்கு தனது செயலுக்கான தண்டனையை விரைவில் அனுபவிப்பார் என்றும் நெட்டிசன்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications