வாங்க பக்கோடா, டீ விற்று வாழ்வோம்.. பொறியாளர் தின வாழ்த்து கூறிய மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பொறியாளர் தினத்துக்கு இன்று வாழ்த்து தெரிவித்த நிலையில் அவரை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். பொறியியல் துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வரை பக்கோடா, டீ விற்று வாழலாம் என பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் கட்டட பொறியாளர் என போற்றப்படும் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தை சேர்ந்த சர் எம் விஸ்வேஸ்வரய்யா 1860 செப்டம்பர் 15ல் பிறந்தார். அதன்படி இந்தியாவில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் அல்லது என்ஜினீயர் தினம் செப்டம்பர் 15ல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாரத ரத்னா விருது
இவர் இந்திய பொறியியலின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். கர்நாடகத்தில் காவிரிக்கு குறுக்கே கேஆர்எஸ் அணையை கட்டியதில் தலைமை பொறியாளராக இவர் இருந்தார். மேலும் டாடா ஸ்டீல் குழுமத்தின் இயக்குனர் குழுவிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும் பொறியில் துறையில் பல வியத்தகு சாதனைகளை செய்துள்ளார். இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறியாளர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டரில் சர் எம் விஸ்வேஸ்வரய்யா பற்றி அவர் மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசியதன் ஆடியோவை பகிர்ந்துள்ளார்.

மோடி கூறியது என்ன?
மேலும், ‛‛பொறியாளர் தினத்தில் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் சிறப்பான பங்களிப்பை நினைவுக்கூறுகிறேன். அவர் நாட்டின் பொறியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக முந்தைய மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன். பொறியாளர் தினத்தில் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நாட்டை கட்டியெழுப்புவதில் திறமையான பொறியாளர்களை கொண்டிருப்பதன் மூலம் நம் நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. மேலும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்பட பொறியியல் படிப்பிற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது'' என தெரிவித்து இருந்தார்.

பிரகாஷ் ராஜ் விமர்சனம்
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் பொறியாளர் தின வாழ்த்துக்கு பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அதுவரை பக்கோடா அல்லது சாய்(டீ) விற்று வாழலாம்'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்பட பொறியியல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறிய நிலையில் மேம்படுத்தும் வரை பக்கோடா அல்ல டீ விற்று வாழலாம் எனக்கூறி பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications