ராகுல் போல 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உ.பி. பாஜக எம்.பி. ராம் சங்கர் கத்தேரியா- பதவி பறிப்பு எப்போது?
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போல 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்பி ராம் சங்கர் கத்தேரியா எப்போது தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசிய மோடி பேச்சு இன்றும் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது. ராகுல் பேச்சுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாலேயே உடனே எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மேல்முறையீட்டு மனு மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் உடனடியாக ராகுல் காந்தி எம்.பி. பதவி திரும்ப வழங்கப்படாததால் சர்ச்சை வெடித்தது. ஒருவழியாக லோக்சபா செயலகம், ராகுல் காந்தி எம்.பி. பதவியை திரும்ப கொடுத்தது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினரின் பெரும் உற்சாகத்துக்கு நடுவே ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு மீண்டும் வருகை தந்தார்.
இப்போது ராகுல் காந்தியைப் போல 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உ.பி. பாஜக எம்.பி. விவகாரம் அனலை கிளப்பி இருக்கிறது. 2011-ல் மின்சார நிறுவன ஊழியரைத் தாக்கிய வழக்கில் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் சங்கர் கத்தேரியாவுக்கு ஆக்ரா நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துவிட்டது. தற்போது எட்டாவா லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் ராம் சங்கர் கத்தேரியா.
2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்பி பதவி உடனே பறிக்கப்பட்டது போல கத்தேரியாவின் எம்பி பதவி பறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் லோக்சபா செயலகம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது எதிர்க்கட்சிகளை ஆவேசப்பட வைத்திருக்கிறது. ராகுல் காந்தி விவகாரத்தில் உடனே தகுதி நீக்கம், பங்களா பறிப்பு என வேகம் காட்டிய லோக்சபா செயலகம் இப்போது ஏன் தாமதம் செய்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி.
ஆனால் லோக்சபா செயலக தரப்போ, கத்தேரியாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் கிடைப்பதில் சற்று தாமதம். ஆகையால் நடவடிக்கை மேற்கொள்வதிலும் தாமதம் என்கிறது.
ஓயாத அலைகளோ?
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications