டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியின் தாயார் பற்றி... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC

Google Oneindia Tamil News

டெல்லி: பிபிசி ரேடியோவின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியின் தாயாரை ஒருவர் தரக்குறைவாக விமர்சித்ததைத் தொடர்ந்து Boycott BBC என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

பிபிசி ரேடியா சார்பில் 'பிக் டிபேட்' என்ற விவாத நிகழ்ச்சி நடத்தப்படு வருகிறது. சமீபத்தில் நடந்த விவாதத்தில் பிரிட்டன் நாட்டில் சீக்கியர்களும் இந்தியர்களும் எதிர்கொள்ளும் இன ரீதியிலான பாகுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதம் நடந்துகொண்டிருந்தபோது சைமன் என்ற நேயர் ஒருவர் இணைப்பில் வந்தார். முதலில் சைமனும் நெறியாளரும் இன பாகுபாடு குறித்து விவாதித்தனர். அப்போது அவர்கள் அப்படியே டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்தும் விவாதிக்க தொடங்கினர்.

After offensive remarks against PM Modis mother, Boycott BBC is trending on Twitter

அப்போது, திடீரென்று கோபமான சைமன் மிகவும் ஆக்ரோஷமாக மோடியின் தாயாருக்கு எதிராக மிக மோசமான தரக்குறைவான கருத்துகளை முன்வைத்தார். நிலைமையை சுதாகரிக்கொண்ட நெறியாளர் மீண்டும் இன பாகுபாடு குறித்துப் பேச தொடங்கினார். ஆனால், அதற்குள் சைமன் மோடி குறித்துப் பேசியது பல ஆயிரம் பேர் கேட்டுவிட்டனர்.

அதன் பின்னரும்கூட பிரதமர் மோடியின் தாயார் குறித்து சைமன் தெரிவித்த கருத்தை பிபிசி ரேடியோ நீக்கவில்லை. பிபிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சைமனின் பேச்சு நீக்கப்படாமல், அந்த விவாத நிகழ்ச்சி அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

பிபிசியின் இந்த செயல் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிபிசிக்கு எதிரான தங்கள் கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர், பிபிசி இந்தியாவுக்கு எதிரானது என்றும் பிபிசியை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ட்விட்டரில் Boycott BBC என்ற ஹேஷ்டெக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலரும் Boycott BBC ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

English summary
'Boycott BBC' is trending on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X