டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவால்களை சமாளிக்க முழு போர்படையாக மாறும் இந்திய ராணுவம்! அக்னிபாத் குறித்து ராணுவ தளபதி பெருமை

Google Oneindia Tamil News

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையில் முழுமையான போர் படையாக இந்திய ராணுவம் மாறும் என ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே நம்பிக்கை தெரிவித்தார்.

Recommended Video

    Agnipath In Indian Army | Agnipath என்றால் என்ன? யார் இந்த Agniveer? | #Defence

    இந்திய ராணுவத்தில் புதிதாக அக்னிபத் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முப்படையில் ஏற்படும் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் வரை பணியில் இருப்பார்கள்.

    இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் அறிமுகம்.. 4 வருட ஒப்பந்தத்தில் வீரர்களை பணியமர்த்த முடிவு! இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் அறிமுகம்.. 4 வருட ஒப்பந்தத்தில் வீரர்களை பணியமர்த்த முடிவு!

    ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்

    ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்

    சம்பளமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும். பணியின் முடிவில் வரிப்பிடித்தம் இன்றி ரூ.10 லட்சம், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளாது. அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    ராஜ்நாத் சிங் விளக்கம்

    ராஜ்நாத் சிங் விளக்கம்

    இந்தத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் அனுபவத்தை பெற விரும்பும் இந்திய இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றலாம். அவர்கள் விருப்பம்போல் தற்காலிகமாக ராணுவத்தில் சேவை செய்துவிட்டு பிற பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன்மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை குறைக்கும் நோக்கத்தில் இது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இது ராணுவம், விமானம், கடற்படைக்கு வலுசேர்க்கும் என அவர் தெரிவித்தார்.

    ராணுவ தலைமை தளபதி

    ராணுவ தலைமை தளபதி

    இதுபற்றி இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், ‛‛அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தை ஒரேநேரத்தில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் சவால்களை சந்திக்கும் போர் திறன் கொண்ட படையாக மாற்றும் நோக்கம் கொண்டது. ஐடிஐ மற்றும் பிற தொழில்நுட்பங்களை பயின்றவர்களை அக்னிவீரர்களாக பணியமர்த்துவதால் ராணுவத்தின் தொழில்நுட்ப திறன் அதிகரிக்கும். அதோடு, திறமையின் அடிப்படையில் வெளிப்படையான மதிப்பீட்டு முறையில் நீண்ட காலத்துக்கு ராணுவத்தில் சிறந்ததாக வைத்து கொள்ள முடியும்''என நம்பிக்கை தெரிவித்தார்.

    கடற்படை தலைவர்

    கடற்படை தலைவர்

    இந்த கூட்டத்தில் இந்திய கடற்படை தலைவர் ஹரிகுமார் கூறுகையில், ‛‛இத்திட்டத்தின் மூலம் கடற்படைக்கு புதிய இளைஞர்களின் சக்தி கிடைக்கும். தொடர்ந்து திறன் மிகுந்த புதிய இளைஞர்களை கடற்படையினருடன் சேர்க்க முடியும்'' என்றார்.

    English summary
    Agnipath scheme aims to make the Army a future-ready fighting force capable of meeting multiple challenges across full spectrum of conflict says Army chief Gen Manoj Pande.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X