போராட்டத்த விடாதீங்க! பென்சன் தர முடியலனா பிரதமருக்கு ஏன் ரூ.8500 கோடியில் விமானம்! காங்., கேள்வி
டெல்லி: ‛‛அக்னிபாத் போராட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிடாதீங்க. ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியத்துக்கு பணம் இல்லையென்றால் ஏன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.85000 கோடியில் 2 விமானம் வாங்கப்பட்டது'' என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா செகந்திரபாத் உள்பட பல இடங்களில் போராட்டம் வன்முறையானது. ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு
இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் இளைஞர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. மேலும் தொடர் போராட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தாலும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், திட்டத்துக்கு எதிராகவும் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

தர்ணா போராட்டம்
இதேபோல் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எம்பி, எம்எல்ஏக்கள் என அனைவரும் அக்னிபாத் திட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று டெல்லியில் காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் துவங்கியது. அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக்கூறி நடந்த தர்ணாவில் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்பட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தை நிறுத்த வேண்டாம்..
இதில் பிரியங்கா காந்தி பேசியதாவது: அக்னிபாத் திட்டம் நாட்டு இளைஞர்களை கொல்லும். நாட்டின் ராணுவத்தை அழித்துவிடும். இந்த அரசாங்கத்தின் நோக்கத்தை பார்த்து அமைதியாகவும், ஜனநாயக முறையிலும் அகிம்சை வழியிலும் போராடி அதை வீழ்த்துங்கள். அதேநேரத்தில் நாட்டுக்கு உண்மையாக இருந்து சொத்துகளை பாதுகாக்கும் அரசை கொண்டு வர வேண்டும். போராட்டத்தை நிறுத்த வேண்டாம். அமைதியான முறையில் போராடுங்கள். இது உங்கள் நாடு. போராட உங்களுக்கு உரிமை உள்ளது. அதேநேரத்தில் சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம். ஏனென்றால் இவை அனைத்தும் உங்களின் சொத்து. இதை பாதுகாப்பது உங்கள் கடமை. காங்கிரஸின் ஒவ்வொரு தலைவரும், தொண்டர்களும் உங்களுடன் இருக்கிறார்கள்'' என கூறியுள்ளார்'' என்றார்.

மோடிக்கு விமானம் எதுக்கு?
இதில் காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் பேசுகையில், ‛‛புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அரசு பிடிவாதமாக இருக்க கூடாது. அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஓய்வூதியத்தை குறைப்பதாக அரசு கூறினால் பிரதமருக்காக ரூ.8,500 கோடி மதிப்பில் வாங்கிய இரண்டு விமானங்களையும், புதிய நாடாளுமன்றம் கட்டுவதை தவிர்த்து இருக்கலாம். இத்தகைய மாற்று வழியில் பணத்தை சேமித்து இருக்கலாம்'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
அதாவது அக்னிபாத் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகள் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் (பென்சன்) கிடையாது. இதனால் ஓய்வூதியம் வழங்குவதில் பலகோடி ரூபாய் மிச்சமாகும் எனவும், அதனை ராணுவ தளவாடங்கள் வாங்க பயன்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் 2020ல் சுமார் ரூ. 8,400 கோடி மதிப்பீட்டில் பி777 ரக 2 நவீன சொகுசு விமானங்கள் பிரதமர் நரேந்திர மோடி, உயர் பதவியில் இருப்பவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டது. இதனை தான் சச்சின்பைலட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications