டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து.. வான் வீரன் அபிநந்தனுக்காக.. புதிய வரலாறு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து- வீடியோ

    டெல்லி: வாகா எல்லையில் வழக்கமாக நடைபெறும் கொடி இறக்க நிகழ்வு, அபிநந்தனின் வருகையில் இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் வீழ்த்தப்பட்டு விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, அபிநந்தனை பாகிஸ்தான் கண்ணியமாக நடத்த வேண்டுமென குரல் எழுந்தது.

    Ahead of abhinandans return, attari wagah retreat ceremony cancelled

    அவரை எவ்வித சேதாரம் இன்றி விடுவிக்க இந்தியா வேண்டுகோள் விடுத்தது. உலக நாடுகளும் அழுத்தம், அடுத்து சாதி மத பேதமின்றி இந்திய மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். போரை விரும்பவில்லை அமைதியைத்தான் விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பலத்த கரவொலிக்கிடையே அபிநந்தன் விடுதலையை அறிவித்தார்.

    இஸ்லாமாபாதில் இருந்து, லாகூருக்கு விமானம் வழியாக கொண்டு வரப்பட்டு... பின்னர் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அவர் விடுவிக்கப்பட்டார்.

    Ahead of abhinandans return, attari wagah retreat ceremony cancelled

    உலக நாடுகளின் அழுத்தம், அடுத்த சாதி மத பேதமின்றி இந்திய மக்களின் பிரார்த்தனை என ஆரவார முழக்கங்களுக்கு இடையே அவர் வாகா எல்லை வந்தடைந்தார். அவரை இந்திய விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஜாமர் வாகனங்கள் சூழ.., விவிஐபி போல அபிநந்தனை அழைத்து வந்த பாகிஸ்தான் ராணுவம் ஜாமர் வாகனங்கள் சூழ.., விவிஐபி போல அபிநந்தனை அழைத்து வந்த பாகிஸ்தான் ராணுவம்

    இந்நிலையில் வழக்கமாக மாலையில் வாகா - அட்டரி எல்லையில் நடக்கும் கொடி இறக்கும் நிகழ்வு இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் விடுவிக்கப்படும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க விமானப்படையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இங்கு வந்தனர்.

    அதனால் வாகா எல்லையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ahead of abhinandans return, attari wagah retreat ceremony cancelled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X