டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துணிச்சலாக தீர்ப்பு தந்த அதே "நீதிபதி".. அதிமுக வழக்கில் ட்விஸ்ட்.. எடப்பாடி? ஓபிஎஸ்? யாருக்கு ப்ளஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடந்தது. இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார்.

இந்த பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். . கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

எம்பி தேர்தலுடன் எம்எல்ஏ தேர்தல்? எடப்பாடி கோஷ்டி போடும் மனக் கணக்கு! அடடே ’அவரே’ சொல்லிட்டாரே? எம்பி தேர்தலுடன் எம்எல்ஏ தேர்தல்? எடப்பாடி கோஷ்டி போடும் மனக் கணக்கு! அடடே ’அவரே’ சொல்லிட்டாரே?

விசாரணை

விசாரணை

அப்போது சுமார் 20 நிமிடம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கில், அதிமுகவில் எடப்பாடி மேற்கொண்டு மாற்றங்கள் எதையும் செய்ய கூடாது. அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது. தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீங்கள் கட்சியில் மாற்றம் எதையும் செய்யாமல் இருப்பீர்களா என்று எடப்பாடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நீங்கள் உறுதி கொடுக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகளும் எடப்பாடியிடம் கூறினர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இரண்டு நீதிபதிகளிடமும் கட்சியில் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில்தான் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றுள்ளார். அவர் வந்த பின் அமர்வுகள் பல மாற்றப்பட்டு உள்ளன. வழக்குகளை வேகமாக விசாரிக்கும்படி அமர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன. நீதிபதிகள் பலருக்கு வழக்குகள் மாற்றி மாற்றி கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான், அதிமுக பொதுக்குழு வழக்கிலும் அமர்வு மாற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போது வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. ஹிஜாப் வழக்கில் துணிச்சல்களாக ஹிஜாப் அணிய அனுமதி கொடுத்து தீர்ப்பு கொடுத்தது சுதான்ஷு துலியாதான்.

யார் இவர் ?

யார் இவர் ?

ஹிஜாப் வழக்கு கடந்த சில வாரங்களாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதான்ஷு துஹியா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தனர். இஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார். கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார்.இன்னொரு பக்கம் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

அமர்வு

அமர்வு

இந்த துலியாதான் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கையும் விசாரிக்கிறார். ஆனால் இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக சூழ்நிலை செல்லும் என்று கூற முடியாது. கடந்த அமர்வில் நீதிபதிகள் இருவரும்.. கட்சியில் மெஜாரிட்டி முக்கியம் இல்லை. மெஜாரிட்டி பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். விதிகளை மீறியது யார் என்றுதான் பார்ப்போம் என்று கூறினார்கள். அது மெஜாரிட்டி வைத்து இருக்கும் எடப்பாடிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது உள்ள 2 நீதிபதிகளும் அதே நிலைப்பட்டை எடுப்பார்களா அல்லது மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்று பார்ப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாதம் என்ன?

வாதம் என்ன?

இந்த வழக்கில் இதுவரை ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதங்களில், . நான் கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். தேவையான அனைத்தையும் செய்தேன். செய்வேன். ஆனால் என்னை சட்டத்தை மீறி நீக்கி உள்ளனர். இது தொண்டர்களுக்கு எதிரானது. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும், என்று கூறி உள்ளார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை அவசர நேரத்தில் கூட்ட முடியும். அந்த அடிப்படையில்தான் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர்.பெரும்பான்மை அடைப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர். பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
AIADMK case on Edappadi Palanisamy vs O Panneerselvam: SC bench changed ahead of today hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X