ஒரே நாடு ஒரே தேர்தல்.. அடம்பிடிக்கும் பாஜக! முதல் ஆளாய் ஆதரவு கொடுத்த ’அண்ணா’ திமுக! சாத்தியமா?
டெல்லி : தற்போதைய அரசியல் சூழலில் மத்திய பாஜக அரசு கையில் எடுத்திருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். தமிழகத்தின் மிக முக்கிய கட்சியான அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றால் என்ன? அதை நடைமுறைப்படுத்துவதற்கு தேவை என்ன? சாத்திய கூறுகள் உள்ளதா? சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
பாஜக தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இன்னும் ஓராண்டில் அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் வாக்கில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக தற்போது எடுத்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
கடந்த சில வருடங்களாகவே இந்த பேச்சு அடிக்கடி எழுவதும் பின்னர் அடங்கிப் போவதும் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 மாநில சட்ட சேவை தேர்தல் முடிவுகள் வெளியான போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்து காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் ஆளும் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

அதிமுக ஆதரவு
இதற்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவையும் அது எதிர்நோக்கி நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது இந்தத் தேர்தல் திட்டத்திற்கு தங்களது இசைவை தெரிவித்து இருக்கிறது. தனிநாடு திராவிட நாடு கோரிக்கையுடன் தீவிர அரசியல் செய்த அண்ணாவின் பெயரைக் கொண்ட ஒரு திராவிட இயக்கம் முதல் ஆளாக வந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவளித்திருப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

பாஜக ஆட்சி
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வரும். இதனால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாமோ என்ற எண்ணத்தில் எடப்பாடி அப்படி முடிவு எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல உத்திரபிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அது மட்டுமல்லாமல் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் தற்போது தான் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. அடுத்தடுத்து சில மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து வந்தாலும் அனைத்து மாநிலங்களிலும் சட்ட சபைகளை கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டசபை தேர்தலையும் நடத்துவது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் நோக்கம்.

சாத்தியமா
இதன் காரணமாக பெருமளவில் பொருட் செலவு குறையும் என பாஜகவும் தேர்தலை நடத்த தயார் என தேர்தல் ஆணையம் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் பல சிக்கல்களும் இந்த திட்டத்தில் இருக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் காஷ்மீர் உள்ளிட்டவற்றில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. பாதுகாப்பு, தேர்தல் அலுவலர்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் என இன்னும் பல மாநிலங்களுக்கு வேறு மாநிலங்கள் இருந்து தான் அதிகாரிகளையும் வாக்கு இயந்திரங்களையும் கொண்டு செல்லும் நிலை இருப்பது அனைவரும் அறிந்ததே.

என்ன வரலாறு
அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றும் இந்தியாவுக்கு புதிது அல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து 1967 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அதற்கு பிறகு 1968 மற்றும் 69 ஆம் ஆண்டு வாக்கில் சில மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டது. அடுத்து சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு கொண்டுவரப்பட்டால் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிப்பது போல பெரிய தேர்தல்களை வாக்களிக்க வேண்டி இருக்கும். எம்எல்ஏவுக்கு ஒரு வாக்கும் எம்பிக்கு ஒரு வாக்கும் செலுத்த வேண்டி இருக்கும்.

கடும் எதிர்ப்பு
அதே நேரத்தில் பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக தற்போதைக்கு இதற்கு இசைவு தெரிவித்தாலும் பெரும்பாலான மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பிற கட்சிகலே ஆட்சி நடத்தி வரும் நிலையில் அந்த மாநில அரசுகள் இதற்கு ஒப்புக் கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்வி குறி. அப்படி அரசமைப்புச் சட்டத்தை பயன்படுத்தி சட்டசபைகள் கலைக்கப்பட்டாலும் அது மிகப் பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் ஒத்து வருமா
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்பே கலைக்கப்பட்டாலோ அல்லது ஆட்சியை இழக்க நேரிட்டாலும் அதற்கு தனியே தேர்தல் நடத்தப்படுமா என்பதும் அல்லது அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் செலவுகளை குறைக்கும் கால விரயத்தை குறைக்கும் எனக் கூறப்பட்டாலும் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அது சாத்தியமா என்பதை மிகப் பெரிய அளவில் ஆய்வு உட்படுத்த வேண்டும். மேலும் ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒத்து வருமா என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

ஆராயப்பட வேண்டும்
ஒவ்வொரு மாநிலத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மக்கள் சட்டமன்ற தேர்தலில் தங்கள் எதிர்பார்ப்பை வேறு மாதிரியாக வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழகத்தை எடுத்துக் கொண்டால் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அதிமுக நாடாளுமன்றத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திமுகவும் அடுத்து ஆட்சியை இழந்து இருக்கிறது. இப்படி மக்களின் என்ன ஓட்டங்கள் வேறு வேறாக இருக்கும் நிலையில் இது எந்த அளவு கை கொடுக்கும் என்பதும் மிகத் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.

மிகப்பெரிய போராட்டம்
இப்படியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளும் திட்டமிடல்களும் அதிகரித்திருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பிராந்திய கட்சிகளும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் என்ன முடிவு எடுக்கும் என்பதும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. எது எப்படி எனினும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வர பாஜக தீவிரம் காட்டினாலும் அது அவ்வளவு எளிதாக நடைமுறைக்கு கொண்டுவர வாய்ப்பு இல்லை. இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை அந்த கட்சி எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்பதும் உண்மைதான்.
-
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்!












Click it and Unblock the Notifications