'ஏர் இந்தியா' சர்வர்கள் ஹேக்.. 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிவு!
டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதால் அதில் பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துளளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் பயணிகள் விவரங்கள் சேர்த்து வைக்கும் இனையதளத்தை கடந்த பிப்ரவரி மாதம் ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்த சைபர் பாதுகாப்பு தாக்குதலில் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட 2011 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 2021 பிப்ரவரி 3-ம் தேதி வரையிலான பத்து வருட வாடிக்கையாளர் தரவு கசிந்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை இ-மெயில் மூலம் ஏர் இந்தியா அனுப்பியுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. கிரெடிட் கார்டு தரவு திருடப்பட்டதாக நிறுவனம் கூறியிருந்தாலும், சி.வி.வி அல்லது சி.வி.சி எண்கள் திருடப்படவில்லை என்று கூறுகிறது. சி.வி.வி எண் அட்டையின் பின்புறத்தில் உள்ள 3 இலக்க எண்ணாக இது உள்ளது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு இந்த எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
தகவல்கள் திருடப்பட்டுள்ளதால் ஆன்லைன் கடவுச்சொல்லை மாற்ற பயணிகளை ஊக்குவிப்போம். பயணிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எங்களுக்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications