கொஞ்சம் கூட சுயநலமின்றி.. உறுதியாய் எதிர்த்த அகிலேஷ் யாதவ்.. தென்னிந்தியாவிற்காக நின்ற உ.பி தலைவர்!
டெல்லி: மக்களவையில் நேற்று நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், மத்திய அரசு கொண்டு வந்த 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா (தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான தொகுப்பு) தோல்வியடைந்தது.
அனால் இந்த மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னின்று பாதுகாத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தென்னிந்திய தலைவர்கள் இதை எதிர்க்க காரணம் உள்ளது.. ஆனால் அகிலேஷ் யாதவ் இதை எதிர்ப்பதற்கு பின் மிகப்பெரிய அரசியல் நிலைப்பாடு உள்ளது!

சுயநலத்தை விட தேச நலனே முக்கியம்
தொகுதி மறுவரையறை மசோதா, 2026ன் கீழ் தொகுதிகளைப் பிரிப்பதற்கான புதிய ஆணையத்தை உருவாக்குவது மற்றும் தற்போது 543 ஆக இருக்கும் மக்களவை (Lok Sabha) இடங்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது. இதன் மூலம், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுத்தாலும், தற்போது இருக்கும் ஆண் எம்பிக்களின் வாய்ப்புகள் குறையாது என அரசு வாதிட்டது. இதன் மூலம் பெண்களுக்கு இடஒதுக்கீடும் தர முடியும்.
இந்த மசோதாவின்படி, உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் அம்மாநிலத்தின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். இது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிக்கு அரசியல் ரீதியாக அதிக பலத்தைத் தந்திருக்கும். இருப்பினும், அந்தப் பலனைத் தியாகம் செய்துவிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவின் நலனுக்காகவும், குறிப்பாகத் தென்னிந்திய மாநிலங்களின் அதிகாரப் பகிர்வுக்காகவும் அவர் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்கத் தன் கட்சி எம்.பி-க்களுக்கு உத்தரவிட்டார்.
தென்னிந்தியாவின் உரிமைக் குரல்
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் அகிலேஷ் யாதவ் உறுதியாக இருந்தார். "இந்த மசோதா நிறைவேறினால், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படும்" என்ற கருத்தை வலியுறுத்தி, தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் அவர் கைகோர்த்தார்.
மக்களவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில்:
மசோதாவுக்கு ஆதரவாக: 298 வாக்குகள்
மசோதாவுக்கு எதிராக: 230 வாக்குகள்
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (352 வாக்குகள்) ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது.
ஸ்டாலின் பாராட்டு
அகிலேஷ் யாதவின் இந்தத் துணிச்சலான முடிவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். "டெல்லியின் அதிகார மமதையைத் தென்னகத்தின் ஒற்றுமை முறியடித்துள்ளது; இதற்குத் துணை நின்ற தோழர் அகிலேஷ் யாதவிற்குத் தமிழ்நாட்டின் சார்பில் நன்றிகள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற வேண்டுமானால், அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை.
மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் 543 பேரில், குறைந்தது 361 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும்.
ஆனால், வாக்கெடுப்பின் போது:
ஆதரவாக விழுந்த வாக்குகள்: 298
எதிராக விழுந்த வாக்குகள்: 230
தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதோடு பிணைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு முக்கிய மசோதாக்களை அரசு கைவிட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications