வரலாறு தப்பா இருக்கு.. திருத்தி எழுதுங்க.. நாங்க துணையா இருப்போம்.. அமித்ஷா பரபரப்பு உத்தரவு!
டெல்லி: நாட்டின் வரலாறு சிதைக்கப்பட்டுள்ளதாகவும், அவை திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும் இந்த திரிபுகளை சரியாக எழுவதை தற்போது யாரால் தடுக்க முடியும்? என்று கேள்வியெழுப்பிய அவர் வரலாற்றை மீண்டும் எழுதுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத முயன்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் தற்போது உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

வரலாற்று திரிபு
வடகிழக்கு இந்தியாவின் தீரமிக்க போராளிகளில் ஒருவரான 'அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானின்' 400வது பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய அமித்ஷா மேற்குறிப்பிட்டதை கூறியுள்ளார். மேலும்
அவர் பேசியதாவது, "நாட்டின் வரலாறு சிதைக்கப்பட்டுள்ளதாகவும், திரித்து எழுதப்பட்டுள்ளதாகவும் தொடர் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த புகார்கள் உண்மையாகக்கூட இருக்கலாம். தற்போது இதனை திருத்துவதை யாரால் தடுக்க முடியும்? சரியான வரலாற்றை எழுதுவதை தடுப்பது யார்?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹீரோக்கள்
மேலும், "ஒரு நாடு அதன் புகழ்பெற்ற கடந்த காலத்திலிருந்து பெருமை கொள்ளாமலும், அதன் ஹீரோக்களிடமிருந்து உத்வேகம் பெறமலும் இருக்குமேயானால் அந்நாட்டிற்கு சிறப்பான எதிர்காலம் இருக்காது. அப்பேர்பட்ட நாடு சிறந்த குடிமக்களையும் உருவாக்காது. எனவே நாட்டின் குடிமக்களாகிய நாம், நாடு புகழ்பெற்றிருந்த கடந்த காலத்தை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். அதேபோல நமது ஹீரோக்களிடமிருந்து உத்வேகம் பெற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உண்மையை வரலாற்றை நம்மால் காண முடியும். உண்மை நிறுவப்படும். பொய் தன்னால் மறைந்துவிடும். இந்த செயல்களை ஊக்குவிக்கும் ஒரு அரசு தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. உண்மையை மீட்டெடுக்க நாங்கள் பாடுபடுவோம. வரலாற்றில் உள்ள தவறுகளை சரி செய்யுங்கள். உங்களுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும், என்று அமித்ஷா கூறியுள்ளார்.

வரலாறு
அதேபோல நாட்டின் 30 மாபெரும் சாம்ராஜ்ஜியங்களையும் 300 வீரர்களையும் அடையாளம் காணுமாறு வரலாற்று ஆசிரியர்களையும், மாணவர்களையும் வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த லச்சித் பர்புகான் 1622ம் ஆண்டு பிறந்தார். இதில் பர்புகான் என்பது ஒரு பதவியின் பெயராகும். அதாவது, அஹோம் ராஜ்ஜியத்தில் இடம் பெற்றிருந்த முதல் 5 மந்திரிகளை பர்புகான் என்று கூறுவார்கள். அந்த வகையில், லச்சித் மிகச்சிறந்த பர்புகானாக இருந்தார். இவர் இந்த இடத்திற்கு வந்த விதம் சுவாரசியமானது. அதாவது இவரது தந்தை 'மோமாய் தாமுலி போர்பருவா' நான்கு ரூபாய் கடனுக்காக கொத்தடிமையாக வேலை பார்த்தார்.

லச்சித் திவாஸ்
அதன் பின்னர் தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் சக்ரத்வாஜ் சிங்காவால் போர்புகன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வழி வந்த லச்சித், பர்புகானாக உருவானார். இந்த காலத்தில் ராம்சிங்கின் தலைமையின் கீழ் முகலாயப்படை அசாமை நோக்கி படையெடுத்தது. இந்த படையெடுப்பை லச்சித் பர்புகான் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். இதனால் ராம்சிங் கவுகாத்தியிலிருந்து தனது படைகளுடன் வெளியேற நேர்ந்தது. இது சாரைகாட் போர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெற்றியையும் லச்சித் போர்புகனின் வீரத்தையும் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 24ஆம் தேதி 'லச்சித் திவாஸ்' கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று நடந்த இந்த விழாவில் அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications