டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுதான் ஆனந்த் மஹேந்திரா.. தனது ஷோரூமில் அவமதிக்கப்பட்ட விவசாயி! நேரடியாக தலையிட்டு நடவடிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக மாநிலத்தில் மஹேந்திரா கார் ஷோரூம் ஒன்றில் விவசாயி அவமதிக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் ஆனந்த் மஹேந்திரா நேரடியாகத் தலையிட்டுள்ளார்,

Recommended Video

    Car வாங்க சென்ற விவசாயி! நக்கல் செய்த Salesman ! செம்ம Twist| Oneindia Tamil

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான "நப்புக்காக" திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஷோ ரூம் காட்சி மிகவும் ஃபேமஸ் ஆனது. கார் வாங்க செல்லும் விஜயகுமாரையும், சரத்குமாரையும் சேல்ஸ்மேன் அவமதிப்பார்.

    இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம் இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

    அவர்களின் தோற்றத்தை வைத்து சேல்ஸ்மேன் கிண்டல் செய்வார். அப்போது அவர்கள் சாக்கு மூட்டையில் இருந்து பணத்தைக் கட்டு, கட்டாக கொட்டுவதைக் கண்டு சேல்ஸ்மேன் ஷாக் ஆகிவிடுவார்.

     அவமதிப்பு

    அவமதிப்பு

    இதேபோன்ற ஒரு சம்பவம் தான் கர்நாடக மாநிலத்தில் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவின் துமகுருவை சேர்ந்த கெம்பேகவுடா என்ற விவசாயி பொலிரோ பிக்-அப் கார் குறித்து விசாரிக்கத் தனது பகுதியில் உள்ள மஹேந்திரா ஷோரூமூக்கு சென்றுள்ளார். அங்கே விவசாயியின் எளிமையான தோற்றத்தைப் பார்த்து சேல்ஸ்மேன் நக்கலடித்துள்ளார். காரின் விலை குறித்துக் கேட்ட விவசாயிக்கு சேல்ஸ்மேன் முறையாகப் பதில் அளிக்கவில்லை.

    சவால்

    சவால்

    அதற்குப் பதிலாக விவசாயி கெம்பேகவுடாவை பார்த்து அந்த சேல்ஸ்மேன் நக்கலாக, " நீ கார் வாங்க போறியா.. இதோட விலை என்ன தெரியுமா? ரூ 10 லட்சம். உன் பாக்கெட்ல குறைந்தது 10 ரூபாய் இருக்கா? நீயெல்லாம் எதற்கு இங்க வறீங்க. சீக்கிரம் வெளியே கிளம்பு'' என்று அநாகரிகமாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி ஒரு மணி நேரத்தில் 10 லட்ச ரூபாய் பணத்தை ரெடி செய்து வருவதாகச் சவால் விட்டுள்ளார்,

     கெத்து காட்டிய விவசாயி

    கெத்து காட்டிய விவசாயி

    அதேபோல நண்பர்களின் உதவியுடன் ரூ 10 லட்சத்தை விவசாயி ரெடி செய்து வந்துள்ளார். இருப்பினும், அந்த சேல்ஸ்மேனால் உடனடியாக காரை டெலவரி தர முடியவில்லை. வழக்கமாக கார்களுக்கு நீண்ட வெயிட்டிங் லிஸ்ட் (காத்திருப்பு பட்டியல்) இருக்கும். இதனால் காரை சேல்ஸ்மேனால் உடனடியாக டெலிவலி தர முடியவில்லை. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் செய்ய முயன்றனர்.

     மன்னிப்பு

    மன்னிப்பு

    நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விவசாயியிடம் அநாகரிகமான முறையில் பேசிய அந்த சேல்ஸ்மேன் மன்னிப்பு கோரினார். அப்போது தனக்கு அந்த ஷோரூமில் கார் வங்க விருப்பமில்லை என விவசாயி பதிலடி கொடுத்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயியை அவமானப்படுத்திய அந்த சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டினசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்,

     தலையிட்ட ஆனந்த் மஹேந்திர

    தலையிட்ட ஆனந்த் மஹேந்திர

    ஆனந்த் மஹேந்திரா ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளனர். இது தொடர்பாகப் பலரும் ட்விட்டரில் ஆனந்த் மஹேந்திரவை டேக் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், இதற்கு ஆனந்த் மஹேந்திர தற்போது பதில் அளித்துள்ளார். ஏற்கனவே மஹேந்திர & மஹேந்திர சிஇஓ வீஜய் நக்ரா. வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான அனுபவத்தை வழங்குவதில் டீலர்களும் முக்கிய பங்கு உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மரியாதை மற்றும் கண்ணியமாக நடத்தப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார்,

     உடனடி நடவடிக்கை

    உடனடி நடவடிக்கை

    இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டரில், "அனைத்து தரப்பினரையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பதே மஹேந்திரா நிறுவனத்தின் நோக்கம். அனைத்துத் தனிநபர்களின் கண்ணியத்தைக் காப்பது எங்களின் மிக முக்கிய கொள்கை. இதில் எதாவது சிறு தவறு ஏற்பட்டாலும் கூட அதைச் சரி செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். தனது ஷோரூமில் எழுந்த பிரச்சினை குறித்து 24 மணி நேரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள ஆனந்த் மஹேந்திராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    English summary
    Industrialist Anand Mahindra reacts after a farmer in Karnataka was allegedly humiliated at Mahindra and Mahindra SUV showroom: Karnataka farmer was humiliated by Mahindra showroom employee in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X