நான் கற்ற முதல் தமிழ் வார்த்தை "இதுதான்".. பொங்கல் அன்று ஆனந்த் மகிந்திரா போட்ட சூப்பர் ட்வீட்
டெல்லி: நான் தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்தேன். அப்போது நான் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை இதுதான் என ஆனந்த் மகிந்திரா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
Recommended Video
மகிந்திரா குடும்பத்தின் தலைவராக உள்ளவர் ஆனந்த் மகிந்திரா. இவர் இந்தியாவின் தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ 190 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது.
இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். எப்போதுமே சுவாரஸ்யமான விஷயங்களை தனது ட்வீட்டர் மூலம் உலகிற்கு பகிர்வார். அவரது ட்வீட்டில் தொழில் சார்ந்த விஷயங்கள், விழிப்புணர்வு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என அத்தனையும் இருக்கும்.

கொல்லிமலை 70 ஹேர்பின் வளைவுகள்
அண்மையில் கூட நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ள 70 ஹேர்பின் வளைவுகள் குறித்து இவர் ட்விட்டரில் பகிர்ந்தார். எரிக் சோல்ஹைம் என்ற வெளிநாட்டவர் ஒருவர் ஆச்சரியமூட்டும் இந்தியா என குறிப்பிட்டு 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் இந்தியாவின் திரில்லான சாலைகளில் ஒன்று தமிழகத்தில் கொல்லிமலை என குறிப்பிட்டுள்ளார். அதற்கான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ட்வீட்
இதை ரீட்வீட் செய்த ஆனந்த் மகிந்திரா, "எரிக் என் நாடான இந்தியா குறித்து எத்தனை குறைந்த விஷயங்கள் எனக்கு தெரிந்துள்ளது என்பதை உங்கள் ட்வீட் காண்பிக்கிறது. இது தனிச்சிறப்பு. இந்த சாலையை எப்படி கட்டியிருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன் என பகிர்ந்தார். இவரது ட்வீட் மூலம்தான் தமிழகத்தின் கொல்லிமலை உலகளவில் பிரபலமானது தெரியவந்தது.

தமிழ் மொழி
இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று ஆனந்த் மகிந்திரா ஒரு ட்வீட் போட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. அந்த ட்வீட்டில் தமிழ் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் நான் பள்ளிப் படிப்பை தமிழகத்தில் முடித்தேன். அதனால் தமிழில் நான் கற்றுக் கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை நான் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் உரக்கவும் சொல்லியிருக்கிறேன். சில சமயங்களில் மனதிற்குள் சொல்லியிருக்கிறேன்.

போடா டேய்
தமிழ் எப்போதுமே திறமையான மொழி. ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது உங்களது பேச்சை கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக போடா டேய் என சொன்னால் போதும். சென்னையில் யாராவது எனது வண்டி மீது இடித்துவிட்டால் அவர்களை திட்டுவதற்கு கைவசம் நிறைய தமிழ் வார்த்தைகளை கற்று வைத்துள்ளேன் என்றார். இவரது ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள், மௌன ராகம் படத்தில் டெல்லி சிங்கிற்கு நடிகை ரேவதி 3 தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுப்பார். அதில் ஒன்று போடா டேய் ஆகும். இதுதான் நினைவிற்கு வருகிறது என ட்வீட் போட்டுள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications