உலக தடுப்பூசி சந்தையை பிடிக்க.. சண்டையிடும் மாநிலங்கள்.. இந்தியா எங்கே ?.. கெஜ்ரிவால் வருத்தம்!
டெல்லி: இந்திய மாநிலங்கள் சர்வதேச சந்தையில் கொரோனா தடுப்பூசி மார்கெட்டுகளை பிடிக்க ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Recommended Video
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அல்லாடி வருகிறன்றனர்.

தொடங்காத திட்டம்
இது தவிர ஆக்சிஜன் கிடைக்காமல் மாநிலங்கள் தவித்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவோக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தடுப்பூசி தட்டுப்பாடு
ஏறக்குறைய அனைதது மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதே இதற்கு கரணம். இந்தியாவில் இரண்டு நிறுவனங்களே தடுப்பூசி தயாரிப்பதில் செயல்பட்டு வருவதால் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகளை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து முடிவு செய்துள்ளன.

சண்டையிடும் மாநிலங்கள்
தமிழகம் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை பெறுவதற்கு உலகலாவிய டெண்டர் கோரியுள்ளது. பல்வேறு மாநிலமும் இந்த முயற்சியை கையிலெடுத்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- இந்திய மாநிலங்கள் சர்வதேச சந்தையில் கொரோனா தடுப்பூசி மார்கெட்டுகளை பிடிக்க ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன.

கெஜ்ரிவால் வருத்தம்
இதற்காக உத்தர பிரதேசம் மகாராஷ்டிராவுடன் சண்டையிடுகிறது. மகாராஷ்டிரா ஒடிசாவுடன், ஒடிசா டெல்லியிடனும் சண்டையிடுகின்றன. இந்தியா எங்கே? இந்த நிலை உலகில் இந்தியாவின் மதிப்புக்கு தீங்கு விளைவிக்கும். தடுப்பூசி உற்பத்தியாளர்களையும், தடுப்பூசி உற்பத்தி நாடுகளையும் தனிப்பட்ட மாநிலங்களை விட இந்தியா என்று அணுகும்போது நமது பேரம் பேசும் சக்தி மிக அதிகம். இந்திய அரசுக்கு அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிக இராஜதந்திரம் உள்ளது "என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications