சும்மா சும்மா ஆன்டிபயாடிக் உட்கொண்டால் ஆபத்து!லேசான காய்ச்சல், சளிக்கு வேண்டாம் -ஐசிஎம்ஆர் வார்னிங்
டெல்லி: மக்களுக்கு லேசான காய்ச்சல், சளி ஏற்படும்போதே ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அதேபோல் தேவைக்கு அதிகமாகவும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வழங்கக் கூடாது எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான (ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.
ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அவற்றை அழித்து குணப்படுத்தி வருகின்றன.
உலகம் முழுவதும் மருத்துவர்களால் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் எனப்படும் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியா முதலிடம்
அதிலும் குறிப்பாக உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் இந்தியர்களுக்கு அது பயனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.

ஐசிஎம்ஆர் ஆய்வு
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை ஏராளமான நோயாளிகளை ஐசிஎம்ஆர் பரிசோதனை செய்து பார்த்தபோது, கார்பெனம் என்ற ஆன்டிபயாடிக் மருந்து மக்கள் பலருக்கு பயனளிக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த நோய் எதிர்ப்பு மருந்தை பயன்படுத்தும்போதெல்லாம், நோய் கிருமி வேகம் பெறுவதாக கூறப்படுகிறது.

வீரியம் இழந்த ஆன்டிபயாடிக்
அதே சமயம் நோய் கிருமியை அந்த ஆன்டிபயாடிக் மருந்தால் அழிக்க முடியவில்லை எனவும், பாக்டீரியம் கிளெப்சில்லா நிமோனியாவுக்கு அளிக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகளும் தங்கள் வீரியத்தை இழந்துவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் தொடர்பாக மருத்துவர்களுக்கு புதிய அறிவுறுத்தலை ஐசிஎம்ஆர் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, நோயாளிகளுக்கு லேசான காய்ச்சல், சளி இருந்தாலே ஆன்டிபயாடிக் மருந்துகள் உட்கொள்ள பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது.

எத்தனை நாட்கள்?
ஐசிஎம்ஆர் வெளியிட்டு இருக்கும் இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, தோல் மற்றும் மென்மையான திசு தொற்று நோய் போன்றவற்றுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். கம்யூனிட்டி அக்யூர்டு நிமோனியா காய்ச்சலுக்கு 5 நாட்களும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்டிபயாடிக் சிகிச்சை
மேலும் ஹாஸ்பிடல் அக்யூர்டு நிமோனியாவுக்கு 8 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் தீவிர தொற்றும் இருப்பவர்களுக்கு மட்டுமே கண்காணிப்பின் அடிப்படையில் எம்பரிக் ஆண்டிபயாடிக் சிகிச்சையை தர வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications