வங்கதேசம் கொடுத்த வரலாற்று வாய்ப்பு.. திக்குமுக்காடும் சீனா. . இந்தியாவுக்கு ட்விஸ்ட்
டெல்லி: கடந்த காலங்களில் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வந்த வங்கதேசம், தற்போது சீனாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீனா - வங்கதேசம் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA) குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கைக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்குமான உறவு நீண்ட பாரம்பரியம் கொண்டதாகும். அந்நாடு சுதந்திரம் பெறுவதற்கு இந்திய மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவில் லேசான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காரணம் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்தான்.

இந்த சட்டம் இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதாவது, "இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வங்க தேசத்தில், இந்துக்கள் மத சிறுபான்மையினராக இருக்கின்னர். இவர்களுக்கு வங்கதேச அரசு அச்சுறுத்தலாக இருக்கிறதா? அதானால்தான் இந்தியா குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறதா?" என வங்கதேச அரசு கேள்வி எழுப்பியிருந்தது.
இது இரு நாட்டின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் முயற்சியால் இந்த மனக்கசப்பு நீங்கியிருக்கிறது. இந்நிலையில், வங்கதேச அரசு சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளது. அரசுமுறை பயணமாக சீனா சென்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டுடன் தொலைத்தொடர்பு, வேளாண்மை, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இது குறித்த ஏற்கெனவே சீனா - வங்கதேசம் இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்(FTA) குறித்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு தற்போது இரு நாடுகளும் ஒப்புதல் அளித்திருக்கின்றன. இது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தியாவும் வங்கதேசமும் கடந்த 15 ஆண்டுகளில் வர்த்தகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, இணைப்பு, பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளன.
தற்போது சீனாவுடன் இந்த துறைகளில் வங்கதேசம் ஒப்பந்தம் போட்டியிருப்பது, இந்தியாவுடனான விலகலை அடிகோடிட்டு காட்டியுள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே மாலத்தீவு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதற்கும் சீனாதான் காரணம். மாலத்தீவின் புதிய அதிபராக முய்ஸு பதவி ஏற்ற பின்னர் அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு முன்னர் இருந்த அதிபர் இப்படி செய்யவில்லை. அதேபோல இந்தியா-மாலத்தீவு கடல் சார் ஆய்வுகளையும் மாலத்தீவு கைவிடுவதாக அறிவித்தது. இது இந்திய பெருங்கடல் பரப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை குறைப்பதை போல இருந்தது.
இலங்கையும் ஏறத்தாழ சீனாவின் பக்கம்தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் அண்டை நாடுகள் ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக சீனா பக்கம் சாய்ந்திருப்பது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications