ஐபிஎல் பார்க்க எல்லை தாண்டிய ரசிகர்... வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்... பரபர பின்னணி
டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் தரகரிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்து சர்வதேச எல்லையை தாண்டி இந்தியா வந்து எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் 15வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா உள்பட 10 அணிகள் விளையாடுகின்றன. இந்த அணிகளில் பாகிஸ்தான் தவிர அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்பதால் இந்தியாவில் இருப்பது போன்று வெளிநாடுகளிலும் ஐபிஎல்லுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தான் வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் எல்லை தாண்டி இந்தியா வந்துள்ளார். யார் இவர்? எப்படி இந்தியாவுக்குள் நுழைந்தார்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

ஐபிஎல் பார்க்க ஆர்வம்
வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பூர்வா சந்த்பூரை சேர்ந்தவர் எம்டி இப்ராஹிம் (வயது 31). கிரிக்கெட் விளையாடுவதில ஆர்வம் கொண்டவர். இவர் கிரிக்கெட் போட்டிகளையும் ஒன்று விடாமல் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக ஐபிஎல் உள்பட அனைத்து நாடுகளின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் ரசித்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க விரும்பினார்.

எல்லை தாண்ட ரூ.5 ஆயிரம்
விமானத்தில் செல்ல வசதியில்லாததால் அவர் எல்லை தாண்டி இந்தியா வந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ரசிக்க முடிவு செய்தார். இதற்காக அவர் வங்கதேசத்தில் உள்ள தரகரை அணுகினார். அவரிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்த இப்ராஹிம் வங்கதேச நாட்டில் இருந்து எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தார்.

பிஎஸ்எப்பிடம் சிக்கினார்
மேலும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கனஸ் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தார். அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்(பிஎஸ்எப்) சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஐபிஎல் பார்க்க மும்பைக்கு செல்லும் ஆர்வத்தில் எல்லை தாண்டியது தெரியவந்தது.

வங்கதேசத்திடம் ஒப்படைப்பு
இதையடுத்து சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நல்லெண்ண அடிப்படையில் இப்ராஹிமை வங்கதேச நாட்டினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இம்ராஹிம் முறைப்படி வங்கதேசத்தின் எல்லையோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று எல்லை பாதுகாப்பு படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications