தேஜஸ்வி Vs நிதிஷ்.. பாஜகவை உற்சாகத்தில் ஆழ்த்திய ஒட்டுமொத்த கணிப்புகள்
டெல்லி: 2ம் கட்ட பீகார் சட்டசபை தேர்தல் மாலை 6 மணியுடன் முடிந்தது. அதனை தொடர்ந்து பலரும் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மீது கவனத்தை திருப்பி உள்ளனர். பல்வேறு கணிப்புகள் பாஜக கூட்டணியே வெல்லும் என்று கணித்துள்ளன. பெரும்பாலான கணிப்புகள் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறியுள்ளன. ஒட்டுமொத்தமாக வெளியிட்ட கணிப்பின்படி பார்த்தால், பாஜக ஜக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி 153-167 இடங்களை பெறும் என கூறப்பட்டுள்ளது
பீகார் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த உடனே கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளை விட்டு வெளியேறிய உடனேயே வெளியேறும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டிருக்கினற்ன. பல்வேறு நிறுவனங்கள் அல்லது ஊடக அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் வாக்காளர்களிடம் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தந்த கணிப்புகள்படி வெளியிடப்பட்டு வருகிறது.

தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கணிப்பு: என்டிஏ கூட்டணி 145-160 இடங்கள், காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி 73-91, மற்றவை 5-10
People's Insight என்ற நிறுவனத்தின் கணிப்பின் படி: என்டிஏ 133-148, காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி (MGB) 87-102, ஜன் சுராஜ் கட்சி (JSP) 0-2, மற்றவை 3-6
Matrize வெளியிட்ட கணிப்பின் படி: பாஜக கூட்டணி 147-167, காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி 70-90
People's Pulse வெளியிட்ட கணிப்பின் படி: பாஜக கூட்டணி 133-159, காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணி 75-101, ஜன் சுராஜ் கட்சி 0-5 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
அனைத்து கருத்துக்கணிப்புகளுமே தேசிய ஜனநாயக கூட்டணி தான் கண்டிப்பாக அதிக இடங்களில் வெல்லும் என கூறியுள்ளன.
DVC ரிசர்ச் எடுத்த கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பின்படி, பாஜக ஜக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 137-152 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸ் ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி 83-98 இடங்களை வெல்லும் என்றும், ஜான் சுராஜ் 2-4 இடங்களை வெல்லலாம் என்றும், மற்றவை 4-8 இடங்களைப் பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
People's Pulse வெளியிட்ட கணிப்பின் படி, பீகார் முதலமைச்சருக்கான வாக்காளர்களின் விருப்பங்கள்:
தேஜஸ்வி யாதவ்: 32%
நிதிஷ் குமார்: 30%
பிரசாந்த் கிஷோர்: 8%
சிராக் பாஸ்வான்: 8%
சாம்ராட் சவுத்ரி: 6%
ராஜேஷ் குமார்: 2%
மற்றவர்கள்: 14%
தேஜஸ்வி யாதவ் மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளராக நிதீஷ் குமாரை விட முன்னணியில் இருக்கிறார்.
பீகார் சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக வெளியிட்ட கணிப்புகள் அடிப்படையில் பார்த்தால், சராசரியாக பாஜக ஜக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணி 153 முதல் 167 இடங்களை பெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ஆர்ஜேடி அடங்கிய கூட்டணி 76 முதல் 90 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 3 முதல் ஏழு இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications